அடகு வைக்கப்பட்ட நகைகள் குறித்து அதிரடி அறிவிப்பு

136
பொருளாதாரப் பிரச்சினைகள் காரணமாக கடந்த வருடம் நாடு முழுவதிலும் 68,729 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான தங்க நகைகள் வங்கிகளிலும், அடமான நிலையங்களிலும் அடகு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளியியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், கடும் வறட்சி நிலவும் பதினைந்து மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பல்வேறு பொருளாதாரச் சிக்கல்களால் நகைகள் உட்பட 10,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்களை அடகு வைத்துள்ளதாகவும் வங்கிகள் மற்றும் அடமான மையங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் சிலர் பொருளாதார பிரச்சினைகள் காரணமாக தங்களது சொத்துக்களை விற்பனை செய்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, பொருளாதார நெருக்கடி காரணமாக அடகு வைக்கப்பட்ட நகைகளை மீட்க பணமின்றி நகைகளை இழக்கும் போக்கு அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகின்றது.
SHARE