அடுத்தடுத்து அரங்கேறிய வெற்றிகள்

262
அவுஸ்திரேலியாவில் இந்திய டெஸ்ட் அணித்தலைவர் விராட் கோஹ்லியை அவருடைய உடைமாற்றும் அறையில் இந்திய டி20 வீராங்கனைகள் சந்தித்துள்ளனர்.இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

இதில் இந்தியா- அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று அடிலெய்டில் நடந்தது.

இதே அடிலெய்டு மைதானத்தில் தான் அவுஸ்திரேலியா- இந்தியா மகளிர் அணிகளுக்கு இடையேயான 3 டி20 போட்டிகளை கொண்ட தொடரின் முதல் டி20 போட்டி இன்று நடைபெற்றது.

முன்னதாக இரு அணியினரும் ஒரே மைதானத்தில் தான் பயிற்சியில் ஈடுபட்டனர். பயிற்சி முடிந்து ஆடவர் கிரிக்கெட் அணி தங்களது உடைமாற்றும் அறைக்கு சென்று விட்டனர்.

இந்நிலையில் இந்திய டி20 மகளிர் அணியினர் டெஸ்ட் அணித்தலைவர் விராட் கோஹ்லியை சந்திக்க அவரது உடைமாற்றும் அறைக்கு வெளியே காத்திருந்தனர்.

இதை இந்திய அணியின் மேலாளர் கபில் சர்மா விராட் கோஹ்லியிடம் தெரிவித்துள்ளார்.

உடனே வெளியில் வந்த கோஹ்லி, மிதாலி ராஜ் தலைமையிலான மகளிர் இந்திய அணியிடம் கலந்துரையாடினார். பின்னர் அனைவரும் கோஹ்லியுடன் உற்சாகமாக செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

அடிலெய்டு மைதானத்தில் இன்று நடந்தப் போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியை வீழ்த்தியது.

அதேபோல் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியுள்ளது.

SHARE