அடேங்கப்பா..! சுவிஸில் கொளுத்தி தள்ளிய வெயில்!

181

சுவிட்சர்லாந்தில் நேற்று (வியாழக்கிழமை) வெப்பசலனமானது இந்த வருடத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் அதிகமாக பதிவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதில் ஜெனிவா நகரத்தில் வெப்பநிலை 33.3 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. இந்த வருடத்தில் முதன்முறையாக 33 டிகிரி செல்சியசை தாண்டி வெயில் கொளுத்தியுள்ளது.

மேலும், சிலப் பகுதிகளில் நேற்று இரவிலும் வெப்பநிலை இறங்காமல் இருந்துள்ளது. இரவிலும் 20 டிகிரி செல்சியஸ் காணப்பட்டது. இதனால் மக்கள் மிகவும் அவதிப்பட்டுள்ளனர்.

Basel City மண்டலத்தில் உள்ள St. Chrischonaவில் இரவு நேரத்தில் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதாவது, அங்கு 22.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.

மேலும், Vevey, Lausanne மற்றும் Le Bouveret போன்ற பகுதிகளிலும் இதே நிலை காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அளவுக்கு அதிகமான வெப்பநிலையில் Valais மண்டலப் பகுதியில் காட்டு தீ அச்சுறுத்தலும் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதே நிலை ஞாயிற்றுக்கிழமை வரை நீடிக்கும் என்றும், இதனால் மக்கள் முன்னெச்சரிக்கையாக செயல்படுவது நல்லது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த வாரம் வெயில் கொளுத்தி தள்ளினாலும், அடுத்த வாரம் புயலுடன் கூடிய மழை வர வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் இந்த மழை சூடான சூழ்நிலையை சற்று மாற்றியமைக்கும்.

SHARE