அணு ஆயுதங்களுடன் வடகொரியா! கைகோர்த்த அமெரிக்கா- தென் கொரியா- நீடிக்கும் பதற்றம் 

261
கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்குதல் நடத்தும் ஏவுகணையில் பொருத்துவதற்கான அணு ஆயுதங்களை தயாரித்துள்ளதாக வட கொரியா அறிவித்துள்ளது.
வடகொரியா அணு ஆயுத சோதனை மற்றும் ஏவுகணை சோதனையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

உச்சக்கட்டமாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் அணு ஆயுதத்தை விட ஆபத்தான ஹைட்ரஜெனை வெடித்து சோதனை நடத்தியது.

மேலும் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் ஏவுகணையையும் சோதித்து பார்த்தது.

இதன் காரணமாக அந்நாட்டின் மீன் ஐக்கிய சபையின் பாதுகாப்பு கவுன்சில் பொருளாதார தடை விதித்தது.

எனினும் தனது நிலையில் இருந்து பின்வாங்காத வடகொரியா ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகிறது.

அந்நாட்டின் அதிபர் கிம் ஜொங் உன்னும் அமெரிக்கா மற்றும் தென் கொரிய தலைவர்களுக்கு எதிராக எச்சரிக்கை விடுத்து வருகிறார்.

இந்நிலையில் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் ஏவுகணையில் நிரப்புவதற்கான அணு ஆயுதங்களை தங்கள் நாட்டு விஞ்ஞானிகள் தயாரித்துள்ளதாக கிம் ஜொங் உன் தெரிவித்துள்ளார்.

ஏவுகணையில் பொருத்துவதற்கு அவை தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் உருளை வடிவ பொருள் ஒன்றுடன் கிம் மற்றும் அதிகாரிகள் இருப்பது போன்ற புகைப்படத்தை வடகொரிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

அந்த உருளை வடிவ பொருள் அணு ஆயுதப்பொருளாக இருக்கலாம் என பல்வேறு நாட்டின் விஞ்ஞானிகளும் அச்சம் தெரிவித்துள்ளனர்.

வடகொரியா வெளியிட்டுள்ள புகைப்படங்களில் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் ஏவுகணையின் புகைப்படமும் இடம் பெற்றுள்ளது.

இந்நிலையில் வடகொரியாவுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து தென்கொரியாவில் ஆயுதங்களை குவிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் கொரிய தீபகற்பம் அருகே பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

SHARE