அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் விற்ற அமெரிக்க இளம்பெண்

229
அமெரிக்காவில் தனது அங்கரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை இளம்பெண் ஒருவர் இணையத்தில் விற்று வருவாய் ஈட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் Gaines Towenship பகுதியில் குடியிருந்து வருபவர் பெயர் வெளியிடப்படாத 15 வயது இளம்பெண்.

இவர் தனது தினசரி தேவைகளுக்காக தனது அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை இணைய நண்பர்களுக்கு விற்று 1100 டொலர் வருவாய் ஈட்டியுள்ளார்.

சமூக வலைத்தளங்களை பயன்படுத்தியே இவர் தனது அந்தரங்க புகைப்படங்களை விற்பனை செய்ய வாடிக்கையாளர்களை பெற்றுள்ளார்.

கடந்த ஓராண்டுகளாக இவர் இந்த விற்பனையை செய்து வருவதாகவும், கடந்த மாதத்தில் மட்டும் 5 வாடிக்கையாளர்கள் இவரிடம் இருந்து புகைப்படம் மற்றும் வீடியோக்களை வாங்கியுள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புகைப்படம் ஒன்றிற்கு 20 முதல் 100 டொலர் வரை வாடிக்கையாளர்களிடம் இருந்து ஈடாக்கியதாக விசாரணையின் போது இவர் பதிவு செய்துள்ளார்.

சில வாடிக்கையாளர்கள் தம்மிடம் தொடர்ந்து புகைப்படங்கள் வாங்கி வருவதாக தெரிவித்துள்ள அந்த இளம்பெண், PayPal வழியாக கட்டணங்களை செலுத்தியதாகவும் குறிப்பிட்டார்.

ஓராண்டுக்கும் மேலாக தனது அந்தரங்க புகைப்படங்களை விற்று வந்த இவருக்கு திடீரென்று தனது தாயாரால் சிக்கல் வந்துள்ளது.

இவரது நடவடிக்கைகளை தெரிந்துகொண்ட தாயார் உடனடியாக பொலிசாரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

சமூகவலைத்தளங்களில் அதிக நேரம் ஈடுபாடு காட்டும் சிறுவர் சிறுமியர் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவதாக கென்ட் கவுண்டி ஷெரீஃப் கருத்து தெரிவித்துள்ளார்.

SHARE