அமெரிக்க கிரிக்கெட் அணியில் இலங்கை வீரர்!

158

625-500-560-350-160-300-053-800-748-160-70-1

அமெரிக்க கிரிக்கெட் அணிக்கு இலங்கை மற்றும் கனடாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரான புபுது தசநாயக்க பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக புபுது தசநாயக்க கூறுகையில், இந்த வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அமெரிக்காவில் கிரிக்கெட்டை வளர்க்க இது சிறந்த தருணம்.

அமெரிக்காவிலும் திறமையான வீரர்கள் உள்ளனர். கடின உழைப்பின் மூலம் அமெரிக்காவிலும் கிரிக்கெட்டை உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்ல முடியும்.

அடுத்த மாதம் 29ம் திகதி முதல் நவம்பர் 5ம் திகதி வரை லொஸ்ஏஞ்சல்ஸ் பகுதியில் ஐசிசி உலக கிரிக்கெட் லீக் தொடர் நடைபெறவுள்ளது.

இந்த தொடரில் பங்கேற்க உள்ள அமெரிக்க அணியை சிறந்த வீரர்களை கொண்டு ஆயத்தப்படுத்துவதே தனது முதல் இலக்கு என்று கூறியுள்ளார்.

SHARE