அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் குறித்து அனைத்து அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் : ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க

121

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் குறித்து அனைத்து அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பது உள்ளிட்ட விடயங்கள் அடங்கிய அரசியலமைப்பின் 20 ஆவது சட்டமூல வரைவை நாடாளுமன்ற பொதுச் செயலாளர் ஆகியோரிடம் ஜே.வி.பி நேற்று கையளித்தது.

அதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே அதன் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பானது பகுதி அளவில் அல்லாமல் முழுமையாக மறுசீரமைக்கப்பட வேண்டும் என சிறுபான்மைக் கட்சிகள் தெரிவித்துள்ளன.

எனவே, 20ஆம் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டை சிறுபான்மைத் தரப்பினர் இதுவரை வெளிப்படுத்தவில்லை.

இந்த நிலையில், சிறுபான்மை தரப்பினரின் மேற்படி நிலைப்பாடு குறித்து ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இது குறித்து அனைத்து அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடத் தயார் என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

 

 

 

 

SHARE