அரசியல் தமிழ் கைதிகள் உடன் விடுதலை செய்யப்படாதுவிடின் இன நல்லினக்கம் சாத்தியமற்றது வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வைத்திய கலாநிதி சி.சிவமோகன் குமுறல்.

300

IMG_20151014_102010

 

2015 ஜனாதிபதி தேர்தலில் ஜனதிபதி மைத்திரிபால சிறிசேன வெற்றிபெறுவதற்கு தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக உழைத்தனர். தமது உறவுகளுடன் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்கப்படுவர் என தமிழ் மக்கள் நம்பினர். பின்னர் 100 நாள் வேலைத்திட்டத்தில் விடுவிக்கப்படாதத்திற்கு பொது தேர்தலை காரணம் காட்டினர் இந்த நல்லாட்சி அரசினர். இன்று அரியணையில் ஏறிய பின் அவர்கள் தங்கள் பழைய மேலாதிக்க சிந்தனையை உறுதிப்படுத்தும் முகமாக  செயல்பட்டு வருவது கவலைக்குரியதாகும். இன்று ஐ.நா மன்றத்தையும் சர்வதேசத்தையும் தாம் ஒரு நியாயாதிக்கவாதிகளாக  காட்டி நிற்கும் இவர்கள் உடன் 300 க்கு மேற்பட்ட அரசியல் கைதிகள் அனைவரையும் பாகுபாடு இன்றி விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பலர் சித்திரவதையால் கட்டாய வாக்குமூலங்கள் பெறப்பட்டபின் தீர்ப்பு வழங்கப்பட்டு சிறையில் வாடுகின்றனர். பலர் வழக்குகளை எதிர்நோக்க பணவசதி இன்றி அல்லல்பட்டுவருகின்றனர். இன்னும் ஒரு தொகையினர் வழக்குகள் தாக்கல் செய்ய ஆதாரங்கள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பலரது குழந்தைகள் குடும்பங்கள் பராமரிக்க ஆட்களின்றி அனாதைகளாக விடப்பட்டுள்ளனர்.
இப்படியாக பெருந்தொகையான அரசியல் கைதிகள் பூசா வதைமுகாம், கொழும்பு றிமாண்ட் சிறைச்சாலை(CRP) , வெலிக்கடை சிறைச்சாலை ,போகம்பரை ,அநுராதபுரம் போன்ற மேலும் பல  சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
தற்சமயம் அனைவரும் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது எனவே நல்லாட்சி அரசு உண்மை எனின் இன நல்லினக்கம் என்னும் பேச்சு உறுதியானது எனின்  ஜனாதிபதியின்பால் மனிதாபிமானம் உள்ளதெனின் அனைத்து அரசியல் கைதிகளையும் உடன் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். என வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ  வைத்திய கலாநிதி சி.சிவமோகன் கூறினார்…
SHARE