அரபு நாடுகளில் படமாக்கப்பட்ட முதல் தமிழ்ப்படம் திருந்துடா காதல் திருடா

663

 

மலையாளத்தில் ‘ஷபவம்’ திரைப்படத்தின் மூலம் சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது பெற்ற இயக்குனர் அசோக் ஆர்.நாத். மலையாளத்தில் மோகன்லால், பாலசந்திர மேனன், சுரேஷ்கோபி போன்ற முன்னணி நட்சத்திரங்களை வைத்து படம் இயக்கிய இவர் தமிழில் ‘திருந்துடா காதல் திருடா’ என்ற படம் மூலம் அறிமுகமாகிறார்.இதில் நாயகனாக ஆதில் இப்ராஹிம், நாயகியாக சுதக்‌ஷனா அறிமுகமாகிறார்கள். மேலும் இப்படத்தில் சஜீவ் பாஸ்கர், பிரவீன் இராமசந்திரன், கோப்ஸ், சூரியபிரகாஷ், ஃபெனல் டிசில்வா, மாஸ்டர் ஆதித்திய ஹரி, சுமிதா பாபு, ஷிக்க ஹரிலால், பேபி டயான நவமி, ஒல்காகோவல்ச்சக், மலையாள முன்னணி நடிகர்களான முகேஷ், கொச்சு பிரேமன் போன்றவர்களும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.

படத்தைப் பற்றி இயக்குனர் கூறும்போது, காதல் வலிமையானது, களங்கமின்றி அதில் வெற்றி காண வேண்டும். ஒரு இளம் பெண்ணின் வித்தியாசமான போராட்டம் தான் ‘திருந்துடா காதல் திருடா’ படத்தின் கதை என்று கூறினார். மேலும் இப்படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகள் அனைவரும் இந்தியாவில் இருந்து அரபு நாடுகளுக்கு வேலை பார்க்க சென்றவர்கள். அவர்களுக்காக அங்கே ஒரு நேர்முக தேர்வு நடத்தினோம். அதில் சுமார் 400 பேர் கலந்துகொண்டனர். அதில் 40 பேரை மட்டும் தேர்வு செய்து நடிக்க வைத்துள்ளோம். இப்படத்தின் நாயகன் அங்குள்ள தமிழ் எப்.எம்.ல் ரேடியோ ஜாக்கியாக வேலை பார்த்தார். இந்த படத்திலும் அவர் ரேடியோ ஜாக்கியாகவே நடிக்கிறார்.

இந்த படத்தை துபாய், ஷார்ஜா, அலைன், ராசல்கைமா, அஜ்மான், உமல்-குவைன், ஃயூஜேரா போன்ற அரபு நாடுகளில் 60 நாட்கள் படமாக்கியுள்ளோம். அதில் ராசல்கைமா என்ற இடத்தில் மட்டும் 25 நாட்கள் படமாக்கினோம். அடிப்படை வசதிகள் இல்லாத அந்த ஊரில் ரொம்பவும் கஷ்டப்பட்டு படப்பிடிப்பு நடத்தினோம். இந்த படத்தை மலையாளம், தமிழ் என இரண்டு மொழிகளிலும் எடுத்துள்ளோம். இப்படத்தில் 4 பாடல்கள் உள்ளன. ஒரு கஜல் பாடலும் உண்டு. இந்த பாடலை பாடகர் பிரசன்னா 8 மணி நேரம் கஷ்டப்பட்டு பாடிக் கொடுத்தார். கிளப் டான்ஸ், பெல்லி டான்ஸ் உள்ளிட்ட அம்சங்களும் இந்த படத்தில் உண்டு.

இவ்வாறு அவர் கூறினார்.

இப்படத்திற்கு சணல் தோட்டம் ஒளிப்பதிவு செய்கிறார். ரஞ்ஜித் மேலேபாட் இசையமைக்கிறார். நியூ டி.வி. நிறுவனம் தயாரிக்கிறது. டாக்டர் கிருதியா, ஸ்ரீபாரதி ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். விரைவில் வெள்ளித்திரையில் தோன்ற இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றது.

அரபு நாடுகளில் படமாக்கப்பட்ட முதல் தமிழ்ப்படம் திருந்துடா காதல் திருடா
SHARE