அரை நிர்வாண கோலத்தில் தண்டனை அனுபவிக்கும் துருக்கி இராணுவ வீரர்கள் ; அதிர்ச்சியூட்டும் படங்கள்

262

 

துருக்கியில் ஜனாதிபதி தய்யீப் எர்டோகன்  தலைமையிலான ஆட்சியைக் கவிழ்க்க இராணுவத்தின் ஒரு பிரிவினர் புரட்சியில் ஈடுபட்டனர்.இந்த இராணுவ புரட்சியை பொதுமக்கள் வெற்றிகரமாக முறியடித்தனர்.

அப்போது ஏற்பட்ட மோதலில் 290 பேர் உயிரிழந்தனர். 1,500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இராணுவ புரட்சியில் ஈடுபட்ட 6,000 போராளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர், பொலிஸாருக்கும், இராணுவீரர்களுக்கும் நடைபெற்ற சண்டையில் தோற்கடிக்கப்பட்ட இராணுவீரர்களை, துருக்கி குடிமகன்கள் அடித்து உதைக்கும் புகைப்படங்கள் மற்றும் இராணுவவீரர்களின் ஆடைகள் களையப்பட்டு, அவர்களின் கைகள் கட்டப்பட்டு சிர்னெகில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் படுக்கவைக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இந்த புரட்சியில் ஈடுபட்டவர்களுக்கு மரணதண்டனை வழங்குவது குறித்து பாராளுமன்றத்தில் பரிசீலிக்கப்படும் என ஜனாதிபதி தய்யீப் எர்டோகன் கூறியுள்ளார். இதில் உயிரிழந்த மக்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டபோது, அவரும் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

மேலும், துருக்கி நாடு ஒற்றுமையோடு இருக்க வேண்டும் என தான் ஆசைப்படுவதாகவும், இந்த இராணுவ புரட்சிக்கு பின்னணியில் நிச்சயம் பெதுல்லாவே காரணமாக இருக்கிறார் என்பது எனக்கு தெளிவாக தெரியும் என கூறியுள்ளார்.

SHARE