அழையா விருந்தாளி மஹிந்த – மலேசிய பயணம் வெளிவந்தது உண்மை முகம்!

172

mahinda-2

சுதந்திரக் கட்சியின் 65ஆம் ஆண்டு மாநாட்டில் கலந்து கொள்ளாமல் தப்பிக் கொள்வதற்காகவே மஹிந்த மலேசியா சென்றுள்ளார் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

இன்று ஐக்கிய தேசிய கட்சி தலைமையகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

சுதந்திரக் கட்சியின் 65 ஆவது மாநாடு என்பது இனி மேல் நடக்காது, ஒரு தடவையே வரும் அதில் கலந்து கொள்ளாமல் தப்பிக் கொள்வதற்காகவே மஹிந்த மலேசியா சென்றுள்ளார்.

மலேசியாவிற்கு அவரை யாரும் அழைக்கவில்லை. அழையா விருந்தாளியாகவே மஹிந்த அங்கு சென்றுள்ளார். எந்த இராஜதந்திரத்துக்காகவும் மஹிந்த மலேசியா செல்லவில்லை சுதந்திரக்கட்சியை தாழ்த்தும் செயற்பாட்டை செய்யவே அவர் மலேசியா சென்றுள்ளார் இது வேடிக்கையான ஒரு விடயம் என தெரிவித்தார்.

இதில் இருந்து அவரது பொறாமை, கோபம், ஆத்திரம் போன்ற கீழ்த்தரமான மனத்தன்மையுடைய உண்மையான முகம் நேரடியாகவே வெளிப்படுத்தப்பட்டு விட்டது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

உண்மையான சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்கள், மஹிந்தவினதும் அவரது கூட்டாளிகளும் சேர்ந்து சுதந்திரக் கட்சியின் தனித்துவத்தினை கெடுக்கும் இவ்வாறான செயற்பாட்டை வரவேற்கமாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை நாட்டின் முன்னேற்றத்திற்கு பெரும் பங்காற்றியது ஐக்கிய தேசிய கட்சியே. இது நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும்.

கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் இன்றுவரை மக்களால் பெருமளவும் பேசப்பட்டு வரும் அனைத்து அபிவிருத்தி செயற்பாடுகளையும் செய்தது ஐக்கிய தேசிய கட்சியே எனவும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

மகிந்த காலத்தில் வெள்ளை வான் – எமது காலத்தில் புலமைப்பரிசில்

குற்றவியல் தண்டனை சட்டத்தின் கீழ் சைபர் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கும் வகையில் புதிய சட்டம் கொண்டுவரப்படும் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் பாதுகாப்பு குறைவு என்பதை ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் சம்பவத்துடன் தொடர்புடைய 17 வயதான இளைஞன் கல்வியில் திறமைசாலி. அவருக்கு புலமைப்பரிசில் ஒன்றை வழங்குவது குறித்து ஆராய்ந்து பார்க்க உள்ளோம்.

மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இப்படியான சம்பவம் ஒன்று நடந்திருந்தால், வெள்ளை வான் அனுப்பி வைக்கப்பட்டிருக்கும். எனினும் நாங்கள் அந்த இளைஞனுக்கு புலமைப்பரிசில் ஒன்றை வழங்குவது குறித்து கவனம் செலுத்துவோம் எனவும் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

பல்கலைக்கழக மாணவர்கள் மீது தண்ணீர் தாரை மற்றும் கண்ணீர் புகைக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர், இளைஞர்களும் யுவதிகளும் இப்படியான செயல்களுக்கு ஆசைப்படுகின்றனர் என்றார்.

பொலிஸ் பாதுகாப்பு வலயத்திற்கு வருவதை தவிர்க்குமாறு அறிவித்துள்ள நிலையில், அதனை மீறி தண்ணீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகைக்குண்டு தாக்குதலை எதிர்கொள்ளவே வருகின்றனர். நாங்களும் அவ்வாறான காலத்தை கடந்து வந்தோம் எனவும் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

SHARE