அவுஸ்திரேலியாவை பந்தாடிய இந்தியா ரோகித்,கோஹ்லி அதிரடி:

271

 

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ரோகித் மற்றும் கோஹ்லியின் அதிரடியால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்தியா- அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி மெல்போர்னில் இன்று நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து இந்தியாவின் ரோகித் சர்மாவும், தவானும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். தவான் தனது அதிரடியை காட்ட மறுமுனையில் ரோகித் சர்மாவோ நிதானமாக ஆடினார்.

தனது முதல் ஓட்டத்தையே 9வது பந்தில் தான் எடுத்தார். இந்நிலையில் சிறப்பாக ஆடிவந்த தவான் 42 ஓட்டங்களில் மேக்ஸ்வெல் பந்தில் ஆட்டம் இழந்தார்.

அடுத்து ரோகித் சர்மாவுடன் கோஹ்லி கூட்டு சேர்ந்தார். இவர்கள் இருவரும் அதிரடியாக ஆடினர்.

இந்நிலையில் 47 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 60 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ரோகித் சர்மா ஆட்டம் இழந்தார்.

பின்னர் யுவராஜ் சிங் களமிறங்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அணித்தலைவர் டோனி களமிறங்கினார்.

14 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அவரும் ஆட்டமிழந்தார். மறுமுனையில் கோஹ்லி சிறப்பாக ஆடி அரை சதமடித்தார்.

இறுதியில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 184 ஓட்டங்கள் எடுத்தது. கோஹ்லி 59 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார்.

பின்னர் 185 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அவுஸ்திரேலியா களமிறங்கியது.

துவக்க வீரர்களான ஃபின்ச் மற்றும் ஷான் மார்ஷ் களமிறங்கினர். இவர்கள் இருவரும் அதிரடியாக ஆடினார்கள்.

இதனால் அவுஸ்திரேலியாவின் கை ஓங்கியது. இந்நிலையில் 10வது ஓவரை வீசிய அஸ்வின் மார்ஷை 23 ஓட்டங்களின் ஆட்டமிழக்க செய்தார்.

பின்னர் வந்த கிரிஸ் லின் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் முறையே 2 மற்றும் 1 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

விக்கெட்டுகள் ஒரு பக்கம் விழுந்துவந்தாலும் பின்ச் நிலைத்து நின்று ஆடினார்.

அவருக்கு சிறிது நேரம் துணையாக இருந்த வாட்சன் ஜடேஜாவின் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

சிறிது நேரத்தில் பின்ச்சும் 74 ஓட்டங்களில் ஆட்டமிழந்ததால் இந்தியாவின் வெற்றி உறுதியானது.

இறுதியில் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ஓட்டங்களை மட்டுமே அவுஸ்திலேய அணி எடுத்தது.

இதனால் 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்தியத் தரப்பில் பும்ரா, ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

SHARE