அஸ்வினை கழற்றிவிட்டது ஏன்? டோனி விளக்கம்

266

 

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் அஸ்வினை நீக்கியது பற்றி இந்திய அணித்தலைவர் டோனி கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது.

பெர்த்தில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா அவுஸ்திரேலியாவுக்கு 310 ஓட்டங்களை இலக்காக வைத்தது. ஆனால் அதையும் அசால்டாக எட்டி அவுஸ்திரேலியா அசத்தல் வெற்றி பெற்றது.

அதேபோல் பிரிஸ்பேனில் நடந்த 2வது போட்டியிலும் இந்தியாவின் 309 ஓட்டங்கள் இலக்கை அவுஸ்திரேலியா எளிதாக எட்டி 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

இந்நிலையில் நேற்று மெல்போர்னில் நடந்த 3வது ஒருநாள் போட்டியில் இந்தியாவின் 296 ஓட்டங்கள் இலக்கை எட்டி 3 விக்கெட்டுகளால் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா ஒருநாள் தொடரை 3-0 என கைப்பற்றியது.

இந்த தோல்வி குறித்து இந்திய அணித்தலைவர் டோனி கூறுகையில், “மோசமான களத்தடுப்பு காரணமாகவே இந்த போட்டியில் தோல்வியை தழுவினோம்.

கண்டிப்பாக குறைந்தது மூன்று பவுண்டரிகளையாவது எளிதாக தடுத்து இருக்க முடியும். அதே சமயம் இந்த போட்டியில் துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர் என்று கூறியுள்ளார்.

மேலும், அஸ்வினை நீக்கியது தொடர்பாக பேசிய டோனி, ”கடந்த போட்டியில் அஸ்வின் சிறப்பாக பந்துவீசினார்.

ஆனால் நான் அணியில் சில மாற்றங்களை செய்ய விரும்பினேன். இல்லாவிட்டால் அதற்கும் ஏதாவது கேள்வி எழுந்திருக்கும்.

அதேவேளை ரிஸி தவான், குர்கீரட் சிங் ஆகியோரை சோதித்து பார்க்க வேண்டி இருந்தது.

ரிஸி தவானை அணியில் இணைத்ததால் அஸ்வினுக்கு ஓய்வு அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் கடந்த போட்டியில் ஜடேஜா சிறப்பாக செயல்பட்டதால் அவரை நீக்க முடியவில்லை” என்று கூறியுள்ளார்.

 

SHARE