ஆட்சிகள் மாறுகின்றனவே ஒழிய, அதன் கோலங்களான இனவாதம் மாறுவதாக இல்லை.

103

மதங்களுக்கு இடையிலான புரிதலின்மையினால் தோற்றம் பெறுவதுவே மதப்பிரிவினைவாதமும், இனவாதமும். இவற்றின் அடுத்த நகர்வுகளே மதரீதியான மோதல்களும் இன ரீதியான முறுகல்களும். இவை இரண்டும் எப்போது அரசியல் ரீதியாக பரிணமிக்கின்றனவோ அப்போது பெரும்பாண்மை இனமாக வசிக்கக்கூடிய சமூகத்தின திருப்திக்காக சிறுபாண்மை இனமாக வசிக்கக்கூடிய இனங்களின் உடமைகளும், உரிமைகளும், உயிர்களும் காவுகொள்ளப்படுகின்றன. தனிச் சிங்கள சட்டம் என்ற கருப்பொருளை மையப்படுத்தி ஆட்சியினை பிடித்த SWRD பண்டார்நாயக்கவின் காலத்தில் தீவிரம் பெற்ற இச்சித்தாத்தங்களின் விளைவுகளை நன்கு உணர்ந்து கொண்ட தந்தை செல்வநாயகம் அதற்கெதிராக தமது இனத்தின் உரிமைகளை முன்னிருத்திய செயற்பாடுகளில் இரங்கத்தொடங்கினார் இருந்தும் அவற்றை பொருட்படுத்தாத பேரிணவாதம் JR ஜெயவர்தனவின் காலத்தில் அரியலமைப்பு ரீதியாக ஒர் இனத்திற்கான முன்னுரிமை என்ற போர்வையில் முழுமைப்படுத்தப்பட்டது. இனியும் தமது உரிமைகளை அகிம்சை வழி மூலம் பெற்றுக்கொள்ள முடியாது என்று தீர்மானித்த தமிழ் சமூகம் ஆயுத வழியினை தேர்தடுத்தது அதன் விளைவே யாழ்பாணம் நகர மேயர் துறையப்பாவின் முதற்கொலை அன்று தொடங்கிய ஆயுதப்போராட்டத்தின் தீவிரம் 1983ஆம் வருடம் யாழ்ப்பானத்தில் நிலைகொண்டிருந்த றாணுவ வீரகளின் மரணத்தோடு கருப்பு ஜூலையாக மாற்றம்பெருகின்றது. சிறியதொரு நிகழ்வின் பாரதூரத்தை ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் அனுபவிக்கத்தொடங்கியது அதுவே பிற்பட்ட காலங்களில் பரிணமிக்கத்தொடங்கி ஆயுதப் போராட்டத்தை வலுப்பெறச்செய்தது. அதன் பாதிப்புகளிலிருந்து மீள்வதற்கு மூன்று தசாப்தங்களை இந்த நாடு இழந்திருந்தது. தமிழ் சமூகத்தின் உரிமைகள் ஒடுக்கப்பட்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பிற்பாடு பேரிணவாதத்தின் பார்வைகளோ முஸ்லிம் சமூகத்தை குறிவைத்து நகர்த்தபடுகின்றது. சிறந்த முறையிலும், செல்வச்செழிப்புடனும் நகர்புறங்களை தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த அந்த சமூகத்தின் வளர்ச்சியினை கண்டு பொறுக்க முடியாத அப்போதைய பாதுகாப்புச்செயளாலர் ஆட்சியினை தக்கவைத்திருந்த தனது அண்ணனிடமிருந்து மிதமிஞ்சிய அதிகாரங்களை பெற்றுக்கொண்டு நகர அபிவிருத்தி என்ற போர்வையில் முஸ்லிம் அதிகமாக வசிக்கக்கூடிய கொம்பனித்தெரு போண்ற மிக முக்கியமான பகுதிகளை குறிவைத்து காய்களை நகர்தத்தொடங்கினார் தொடர்ந்து  முஸ்லிம்களின் வர்த்தக செயற்பாடுகளை முடக்குவதற்கும் அதற்கான ஆதரவினை பெற்றுக்கொள்ளவதற்கும் அவர் தேர்ந்தடுத்த வழியே பௌத்த தீவிரவாதம் இன மத ரீதியான பேதங்களையும் முறுகல்களை ஏற்படுத்துவதன் மூலம் சிறுபாண்மையினரை அடக்கி ஒடுக்கி ஆட்சி நடத்தலாம் என்ற கருப்பொருளினை மறைமுகமான நிகழ்ச்சி நிரலாக கொண்டு ஆரம்பிக்கப்பட்டதே பொதுபல சேனா. அதன் செயற்பாடுகளுக்கான ஆதரவுத்தளம் அதிகாரவர்க்கத்தின் மூலம் தங்கு தடையின்றி வழங்கப்பட்டதன் விளைவாக நாட்டில் உள்ள மதஸ்தலங்கள்  எங்கும் தாக்குதல் நடத்தப்பட்டன, தம்புள்ளை பள்ளிவாசலினை அகற்றும் நடவெடிக்கைகள் பகிரங்கமாகவே இடம்பெரத்தொடங்கியது முஸ்லிம்களின் உரிமைகளுக்கான குரல்வலைகள் நசுக்கப்பட்டன. தொடர்ச்சியான முறையில் இனவாதம் தூண்டப்பட்டதன் விளைவு அலுத்கம, பேருவளை போண்ற பகுதிகள் களவர பூமியாக காட்சியளித்தன கோடிக்கனக்கான பெருமதி வாய்ந்த உடமைகள் கொள்ளையடிக்கப்பட்டன துப்பாக்கி சன்னங்களின் ஊடாக இளைஞ்ஞர்கள் அங்கவீனமாக்கப்பட்டனர், முன்னிலை வகிக்கும் வர்த்தக நிலயங்கள் தீக்கிரையாக்ப்பட்டன. நாடங்கும் அடுத்து என்ன நடக்கப்போகிண்றது என்ற அதிர்ச்சியிலும், அச்சத்திலும் உறைந்து போய் இருந்த முஸ்லிம்சமூகத்தின் உள்ளங்களில் நம்பிக்கையினை ஏற்படும் வகையில் ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறிகள் தென்பட்டு ஆட்சியும் மாற்றம் பெற்றது. ஆட்சி மாற்றத்தின் ஆரம்ப கால நடவெடிக்கைகள் சிறபாண்மை இன மக்களின் மத்தியில் நம்பிக்கையினை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தாலும் அடுத்து வரும் காலப்பகுதிகளில் அமைதியாக இருந்த இனவாதம் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்து இன்று தீவிரம் பெற தொடங்கி விட்டது. ஆட்சிகள் மட்டுமே மாறகின்றதே ஓழிய ஆட்சியினை நடத்தும் ஆட்சியாளர்களிடம் உள்ளங்களை ஆட்டிப்படைத்துகொண்டிருக்கும் இனவாத தீ மட்டும் மாறுவதாக இல்லை மீண்டுமொருமுறை ஆட்சியினை தக்கவைத்துக்கொள்ள வேண்டுமனில் தமது இனத்தின் திருப்திப்படுத்தும் செயற்பாடுகளில் முன்னிலை வகிப்பது இனவாத செயற்பாடுகளே என்பதை நன்கு உணர்ந்து வைத்திருக்கின்றனர் அதன் அடிவருடிகளான ஆட்சியாளர்கள்.

SHARE