.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொண்டு ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான இந்த டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்பின் இந்திய கேப்டன் அஜிங்கியா ரஹானே கூறும்பொழுது, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு இது வரலாற்று தருணம். நான் உண்மையில் ஆச்சரியத்தில் உள்ளேன் என கூறினார்.
டெஸ்ட் அந்தஸ்து பெற்ற பிறகு ஆப்கானிஸ்தான் பங்கேற்கும் முதல் டெஸ்ட் என்பதால் இது வரலாற்று சிறப்புமிக்க போட்டியாக பார்க்கப்படுகிறது.
அணி வீரர்கள் விவரம்
இந்தியா: எம்.விஜய் அல்லது தவான், லோகேஷ் ராகுல், புஜாரா, ரஹானே (கேப்டன்), கருண் நாயர், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா அல்லது குல்தீப் யாதவ், இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ்.
ஆப்கானிஸ்தான்: முகமது ஷாசாத், ஜாவித் அகமதி, ரமத் ஷா, அஸ்கார் ஸ்டானிக்ஜாய் (கேப்டன்), நசிர் ஜமால் அல்லது ஹஷ்மத்துல்லா சாஹிதி, முகமது நபி, அப்சர் ஜஜாய், ரஷித்கான், அமிர் ஹம்சா அல்லது ஜாகிர் கான், யாமின் அகமத்ஜாய், முஜீப் ரகுமான் அல்லது வபதார்.