ஆல்ப்ஸ் மலை பனிச்சரிவில் சிக்கிய பள்ளி மாணவர்கள் – 20 பேர் மாயம், 3 பேர் உயிரிழப்பு 

259
பிரான்சின் ஆல்ப்ஸ் மலையில் பள்ளி மாணவர்கள் அடங்கிய குழு பனிச்சறுக்கில் ஈடுபட்டிருந்த போது திடீர் பனிச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிரான்சின் லியோன் நகரில் அமைந்துள்ள Saint-Exupery பள்ளி மாணவர்கள் அடைங்கிய குழு ஒன்று ஆல்ப்ஸ் மலையில் உள்ள Les Deux பகுதியில் பனிச்சறுக்கில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது திடீரென்று அப்பகுதியில் கடுமையான பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது, அதில் பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் அடங்கிய குழு சிக்கியுள்ளது.

தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்பு படையினர் மற்றும் பொலிசார் துரித நடவடிக்கைகளில் ஈடுபட்டு காயமானவர்களை மீட்கும் பணியில் களமிறங்கியுள்ளனர்.

இதில் 14 வயதுடைய ஒரு சிறுவனும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்ப்பித்திருந்த 16 வயது மாணவி ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 3 மாணவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பனிச்சரிவில் சிக்கி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட 20கும் மேற்பட்டவர்கள் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணி துரிதமாக நடைபெற்று வருகின்றன.

வானிலை எச்சரிக்கையை அடுத்து கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்தே மாணவர்கள் பனிச்சறுக்கில் ஈடுபட்ட பகுதி தடை செய்யப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

20க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாயமானதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இதனிடையே உயிரிழந்த மாணவர்களுக்காக பூக்கள் சமர்ப்பித்தும் மெழுகுவர்த்தி ஏந்தியும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

SHARE