இங்கிலாந்தை அடித்து துவைக்க தயாரான யுவராஜ் சிங்! கலாய்த்த கங்குலி

280

 

இந்திய முன்னாள் அணித்தலைவர் கங்குலி இளம் வீரர்கள் கற்றுக் கொள்ளும் வாய்ப்பை அதிகம் ஏற்படுத்தியவர்.

இந்திய அணி ஆரம்ப காலத்தில் தடுமாறிய நிலையில், சிறந்த வீரர்களை அடையாளம் கண்டு வலிமையான ஒரு அணியை உருவாக்கி கொடுத்தவர்.

மேலும், அணியில் உள்ள அனைத்து வீரர்களிடமும் எந்தவித ஏற்ற இறக்கமும் இல்லாமல் பழகி அணியின் வெற்றியை மட்டுமே குறிக்கோளால் கொண்டிருப்பார்.

ஒவ்வொரு போட்டிக்கு முன்பாக அவர் அனைத்து வீரர்களையும் உடைமாற்றும் அறையில் ஊக்குவிப்பார்.

கடந்த 2001ம் ஆண்டு நாட்வெஸ்ட் தொடரின் போது நடந்த ஒரு நிகழ்வு, மறுநாள் இங்கிலாந்து அணியுடன் மோத வேண்டும். அப்போது போதிய அனுபமில்லாத யுவராஜிடம் வந்த கங்குலி, “நீ தான் நாளை தொடக்க வீரராக களமிறங்கி அசத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த யுவராஜ் அணித்தலைவரிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் கங்குலியின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டார்.

மறுநாள் இந்திய அணி துடுப்பெடுத்தாட சென்ற போது யுவராஜ் தொடக்க வீரராக களமிறங்க தயாராகி கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த கங்குலி சிரித்தபடி, “என்ன செய்கிறார், நான் கிண்டலாக தான் கூறினேன், நீ 4வது வீரராக களமிறங்கினால் போதும்” என்று கூறி யுவராஜை கலாய்த்தார்.

உடைமாற்றும் அறையில் கங்குலிக்கு யுவராஜ் தான் பொழுதுபோக்கு. யுவராஜ் சிங்கும் அவ்வப்போது கங்குலிக்கும் பதிலடி கொடுப்பார்.

SHARE