இந்தியாஇராணுவம் பாக்கிஸ்தானுக்குள் நூளைந்தது இப்படித்தான்

260

 

இந்தியாஇராணுவம் பாக்கிஸ்தானுக்குள் நூளைந்தது இப்படித்தான்

14432943_1352549214784589_8404948314078171850_n 14440664_1352549278117916_5554385422333855421_n 14440760_1352549248117919_6976091247709165865_n 14441171_1352549171451260_2139168058676540518_n 14492318_1352549314784579_7875741432125738508_n 14494624_1352549344784576_2400522934075433737_n

பாகிஸ்தானில் இந்திய தொலைக்காட்சிகளுக்கு திடீர் தடை விதிக்கப்பட்டதற்கான பின்னணி, பொதுமக்கள் மத்தியில் பெரும் பின்னடைவை காட்டிக் கொள்ளாமல் இருப்பதற்காக பாகிஸ்தான் ராணுவத்தின் முயற்சி என்று தெரியவந்து உள்ளது.
காஷ்மீரின் உரி ராணுவ தளத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்த பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது. இதில் பல பயங்கரவாதிகளும், சில பாகிஸ்தான் ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டனர்.
 ஆனால் பாகிஸ்தான், எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு பாகிஸ்தான் ராணுவம் திருப்பி பதிலடி கொடுத்தது. இதில் இந்திய தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டது என்பதை உறுதியாக கூறுகிறோம். ஆனால் இந்திய ராணுவம் அதனை மறைக்கிறது. இந்திய ராணுவம் அந்த தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் ஏற்பட்ட இழப்பு குறித்து பொய்யாகவும், போலியாக தயாரிக்கப்பட்ட அறிக்கையையும் கூறுகிறது. பாகிஸ்தான் ராணுவம் எந்த வித ஆக்கிரமிப்பு நடந்தாலும் தக்க பதில் கொடுக்க முழு அளவில் தயாராக இருக்கிறது. போர் என்பது யாருடைய விருப்பமும் இல்லை என்று கூறியது.
டி.வி.க்கு தடை
இந்நிலையில் பாகிஸ்தானில் அனைத்து இந்திய தொலைக்காட்சி சானல்களுக்கும் நேற்று முதல் தடை விதிக்கப்பட்டது. பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையம் இதற்கான உத்தரவை வெளியிட்டுள்ளது. பல உள்ளூர் தனியார் சானல்கள் இந்திய தொலைக்காட்சி விவாதங்கள், கலை நிகழ்ச்சிகள், நாடகங்களை அனுமதியின்றி ஒளிபரப்புவதாகவும் புகார்கள் வருகின்றன. 15–ந் தேதிக்கு மேல் இந்திய தொலைக்காட்சி சானல்களோ, வினியோகம் செய்யும் நெட்வொர்க் அமைப்புகளோ இந்த தடையை அமல்படுத்த தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
பின்னணி என்ன?
இந்திய மீடியாக்களில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் அதிரடியாக தாக்குதலை முன்னெடுத்து பயங்கரவாத முகாம்களை அழித்தொழித்ததன் வெற்றி செய்திகள் தொடர்ச்சியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இது, இந்திய ராணுவம் அப்படி ஒரு நடவடிக்கையையே எடுக்கவில்லை என்று மறுப்பு தெரிவிக்கும் பாகிஸ்தானுக்கு பெரும் பிரச்சனையாகியது. இதனையடுத்து பாகிஸ்தானில் மக்களின் எண்ணங்களானது என்ன நடந்தது என்பது தெரியவேண்டும் என்ற மனநிலைக்கு தள்ளப்பட்டது. இந்த பிரச்சனையில் மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெற வேண்டும் என்ற முயற்சியில் பாகிஸ்தான் ராணுவம், பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் அந்நாட்டு பத்திரிக்கைகளின் உதவியை நாடிஉள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
SHARE