இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட 16 குதிரைகள் நுவரெலியா குதிரைப் பந்தயத் திடலில் சுமார் மூன்று கோடி ரூபாவுக்கு ஏலத் தில் விற்கப்பட்டன

166

இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட 16 குதிரைகள் நுவரெலியா குதிரைப் பந்தயத் திடலில் சுமார் மூன்று கோடி ரூபாவுக்கு ஏலத் தில் விற்கப்பட்டன.

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற நுவரெலியா குதிரையோட்ட விழாவின் ஒரு பகுதியாக குதிரைகள் ஏல விற்பனை நடை பெற்றது.

குதிரைப் பந்தய போட்டிகளில் ஈடுபடும் பந்தய உரிமையாளர்களே இவற்றினைப் பெற்றுக் கொண்டனர்.

எதிர்வரும் காலங்களில் நடைபெறும் போட்டிகளில் 16 குதிரை களும் கலந்து கொள்ளவுள்ளன.

நுவரெலியாவின் குதிரைப் பந்தய போட்டிகளை உள்ளூர் மற்றும் சர்வதேச ரீதியாக எடுத்துச்செல்லும் நோக்கத்துடனேயே இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

நுவரெலியாவின் குதிரைப்பந்தய போட்டிகளை உயர்ந்த மட் டத்திற்கு எடுத்து சென்று ஒரு நல்ல போட்டிகளை சர்வதேச மட்டத்துக்கு முன்னேற்றும் நோக்கத்துடனேயே இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக நுவரெலியா ரோயல் குதிரைப் பந்தய சங்கத்தின் தலைவர் சுரன்ஜித் பிரேமதாச கூறினார்.

“கடந்த காலங்களில் இந்த குதிரைப்பந்தய திடலானது மிகவும் மோசமாக பாழடைந்த நிலையில் காணப்பட்டது.

நாங்கள் தற்பொழுது இதனை முழுமையாக அபிவிருத்தி செய்துள்ளோம். நாங்கள் எதிர்காலத்தில் ஒவ்வொரு மாதமும் போட்டிகளை நடாத்த உத்தேசித்துள்ளோம்.

இதன்மூலமாக அதிக உள்ளூர் வெளியூர் உல்லாச பிரயாணிகளை இங்கு வரவழைக்க முடியும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்” எனவும் அவர் தெரிவித்தார்.kuterikuteri01

SHARE