இந்தியா மீது அணுகுண்டு தாக்கி அழிக்கவும் தயாராக இருக்கிறோம் : பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்

269

 

பாகிஸ்தானில் முகாமிட்டுள்ள தீவிரவாதிகள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்திய ராணுவ வீரர்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

pakisran_fotor india

எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியில் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். ராணுவ வீரர்களின் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டு, உடனடியாக அவர்கள் பணிக்கு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளனர்.

பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

பாகிஸ்தானில் புகுந்து இந்தியா தாக்குதல் நடத்தியிருப்பதை அந்நாடு மறுத்தாலும், இந்த விஷயத்தில் கடும் ஆத்திரம் கொண்டுள்ளது. ஏற்கனவே, உரி தாக்குதலில் பாகிஸ்தானை இந்தியா நேரடியாக கண்டித்ததில் இருந்து அந்நாடு பாதுகாப்பை பலப்படுத்தி வருகிறது.

‘இந்தியா மீது அணுகுண்டு தாக்கி அழிக்கவும் தயாராக இருக்கிறோம்’ என அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் மிரட்டல் விடுத்துள்ளார்.

அதற்கேற்ப, கடந்த சில நாட்களாக பாகிஸ்தானின் முப்படைகளும் அதன் எல்லையில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தலைநகர் இஸ்லாமாபாத்திலேயே வானில் ராணுவ ஹெலிகாப்டர், விமானங்களை பறக்க விட்டு போர் பயிற்சி மேற்கொண்டனர்.

இப்போது இந்தியாவும் எல்லையில் தாக்குதலை சமாளிக்க தயார் நிலையில் உள்ளது. இவ்வாறு இரு நாடுகளும் தயார் நிலையில் இருப்பதால் எந்நேரத்திலும் இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் ஏற்படலாம் என்ற பதற்றம் நிலவி வருகிறது.

SHARE