இந்திய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 40 வீடுகள் அமைக்க நடவடிக்கை: சி.சந்திரகாந்தன்

625
இந்திய வீடமைப்புத் திட்டம் மூலமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பேத்தாழை கிரமத்தில் வீடுகள் இல்லாமல் வாழ்கின்ற வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மக்களுக்கு 40 வீடுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியில் ஆலோசகரும், கிழக்கு மாகாண சபை உறுப்பிருமான சி.சந்திரகாந்தன் தெரிவித்தார்.

இந்திய வீடமைப்பு திட்டம் தொடர்பாக பயனிகளுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் வாழைச்சேனை பேத்தாழை குகநேசன் கலாசார மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சந்திரகாந்தன் மேலும் குறிப்பிடுகையில்,

இதற்காக தற்போது 100 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளது. பயனாளிகளின் தெரிவு தொடர்பான தீர்மானத்தை இந்திய வீடமைப்புத் திட்ட உயர் மட்டக் குழுவினர் கிடைத்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்து முடிவெடுப்பார்கள். இவர்களின் தெரிவு சரியான தெரிவாக ஏற்றுக் கொள்ளப்பட்டு இறுதித் தீர்மானமாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டிய பொறுப்பு உங்களிடம் உள்ளது. இவர்களுக்கு இடைஞ்சல் விளைவிக்க கூடாதெனவும் கேட்டுக் கொண்டார். பயனாளிகள் தெரிவில் பொருத்தமானவர்களை தெரிவு செய்வதே இவர்களின் கடமையாகுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இக்கூட்டத்திற்கு வாழைச்சேனை பிரதேச செயலாளர் திருமதி.தெட்சணகௌரி தினேஸ், திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.தேவாகரன் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

SHARE