இந்து சமய விவகாரத்திற்கு பிரதியமைச்சராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் நியமனம் தொடர்பாக சீனித்தம்பி யோகேஸ்வரன் (MP)

104

இந்து சமய விவகாரத்திற்கு பிரதியமைச்சராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் நியமனம் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளதோடு அந்நியமனம் மீளாய்வு செய்யப்பட வேண்டும் என கோரிக்கை முன்வைத்துள்ளார்.

இந்த நியமனம் இலங்கை வாழ் இந்து மக்களை வேதனைப்படுத்தியுள்ளதோடு ஜனாதிபதியினால் இந்து மதம் அவமதிக்கப்பட்டதாகவே கருதுகிறேன் என அவர் புதன்கிழமை (13) ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

கடந்த செவ்வாய்கிழமை இரு இராஜாங்க அமைச்சர்களும் ஐந்து பிரதியமைச்சர்களும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமானம் செய்துகொண்டனர்.

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் புனர்வாழ்வு மீள்குடியேற்றம் வடமாகாண அபிவிருத்தி மற்றும் இந்து சமய விவகார பிரதியமைச்சராக பதவிப்பிரமானம் செய்துகொண்டார்.

இது தொடர்பாக ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது –

ஜனாதிபதியோ பிதரமரோ யாரையும் அமைச்சர்களாக நியமிக்கலாம் பொறுப்புக்களை வழங்கலாம். அந்த அடிப்படையில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானுக்கு பிரதியமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதனை நாங்கள் ஆட்சேபிக்கவில்லை. ஆனால் ஒரு மதம் சார்ந்த அமைச்சுப் பதவி பிறிதொரு மதம் சார்ந்தவருக்கு வழங்கப்படுவதை நாங்கள் ஆட்சேபிக்கிறோம்.

அதாவது பௌத்த சாசன அமைச்சு அல்லது இராஜாங்க அமைச்சு அல்லது பிரதியமைச்சு பதவியை ஜனாதிபதியினால் பௌத்தர் அல்லாத ஒருவருக்கு வழங்க முடியுமா? ஒரு போதும் அவ்வாறு வழங்க முடியாது. இந்த நிலையில் எவ்வாறு இந்து மதம் அல்லாத ஒருவருக்கு இந்து சமய விவகார பிரதியமைச்சு பதவியை வழங்க முடியும் என நான் ஜனாதிபதியிடம் கேட்க விருப்புகிறேன்.

மத ரீதியான கோட்பாடுகளைப் பொறுத்தவரை இந்து சமயத்துக்கும் இஸ்லாத்துக்கும் பல்வேறு விடயங்களில் முரன்பாடுகள் உள்ளன. இந்து சமயம் உருவ வழிபாட்டினை வலியுறுத்துத்துகிறது. கிரிகைகளுக்கு முன்னுரிமையளிக்கிறது. பசு வதையை எதிர்க்கிறது. இந்த நிலையில் இந்து சமய கொள்கைகளையும் கோட்பாடுகளை அனுசரித்து நடப்பததில் பிரைதியமைச்சர் சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் எதிர்நோக்க வேண்டி ஏற்படும்.

இந்து ஆலயத்தில் நடைபெறுகின்ற பூஜை வழிபாடுகளில் பிரதியமைச்சர் என்ற வகையில் அவரால் கலந்துகொள்ள முடியுமா? எனற வினாவிற்கு பிரதியமைச்சர் பதிலளிக்க வேண்டும்.

இந்து சமய விவகாரத்தைப் பொறுத்தவரை டி.எம்.சுவாமிநாதன் இராஜங்க அமைச்சர் மற்றும் பிதியமைச்சர் இல்லாத நிலையில் தனது கடமையை சிறப்பாக முன்னெடுககின்றார். அவருக்கு பிரதியைமைச்சர் தேவை என்றால் அமைச்சரின் ஆலோசனை பெற்று பொருத்தமானவ ஒருவரை நியமித்திருக்கலாம்.

அமைச்சு அல்லது பிரதியமைச்சு பதவி வழங்கப்படும் போது குறித்த துறை சார்ந்தவர்கள், ஆனுபவம் ஆற்றல் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவது பொது நடைமுறையாகும்.

ஆனால் இந்த விடயத்தில் இந்து சமய கோட்பாடுகளை அறிந்திராத பின்பற்றாத ஒருவர் எந்தவகையில் பிரதியமைச்சுக்குப் பொருத்தமானவதாக இருக்க முடியும்.

தற்போதைய அமைச்சரவையில் இரு இந்துக்கள் பிரதியமைச்சர்களாக உள்ளார்கள் அவர்களில் ஒருவருக்கு வழங்கியிருக்கலாம். அல்லது இந்து சமய கோட்பாடுகளுடன் மிகவும் நெருக்கமாக உள்ள பௌத்த மதத்தைச் சேர்ந்த ஒருவரை நியதித்திருக்கலாம்.

பௌத்த சமயத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் எந்த அமைச்சுப் பதவியில் இருந்தாலும் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வரும் போது இந்து ஆலயங்களுக்கு சென்று விஷேட பூஜை வழிபாடுகளில் ஈடுபடுவதைப் பேணிவருகிறார்கள். இது இந்து பௌத்த மத வழிபாடுகளில் உள்ள ஒற்றுமையை பிரதிபலிக்கிறது. ஆனால் இஸ்லாமிய அமைச்சர்கள் இந்து ஆலயங்களுக்குச் செல்வதைத் தவிர்த்துக்கொள்கிறார்கள்.

தற்போதைய அரசாங்கத்தின் ஆரம்பத்தில் மீள்குடியேற்றம் புனர்வாழ்வு இந்து விவகார அமைச்சராக டி.எம்.சுவாமிநாதன் பொறுப்பேற்றிருந்த வேளை அந்த அமைச்சுக்கு இராஜாங்க அமைச்சராக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டிருந்த போதும் இந்து சமய விவகாரம் அவருக்கு வழங்கப்படவில்லை. இதே போன்றதொரு நிலைப்பாட்டினையே ஜனாதிபதி இந்து சமய என்பதை கவனத்தில் கொண்டு காதர் மஸ்தனுக்கு வழங்கப்பட்டுள்ள பிரதியமைச்சுப் பதவியிலிருந்து இந்து சமய விவகாரம் நீக்கப்பட வேண்டும். என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

SHARE