இப்படியும் ஒரு வீரர்

178

இங்கிலாந்தை சேர்ந்த கால்பந்தாட்ட வீரர் மைக்கேல் சோப்ரா, இந்திய கால்பந்து அணியில் விளையாடுவதற்காக தனது குடியுரிமையை இழக்க தயார் என கூறியுள்ளார்.

இந்தியாவில் உள்ள பஞ்சாப்பை பூர்வீகமாக கொண்ட இவர், 1950 ஆம் ஆண்டில் இவரது தாத்தா இங்கிலாந்திற்கு குடிபெயர்ந்ததன் மூலம் இங்கிலாந்தின் குடிமகன் ஆனார்.

இந்நிலையில், சர்வதேச கால்பந்தாட்ட கூட்டமைப்பான ஃபிபா விதிமுறைப்படி, மைக்கேல் சோப்ராவால் இந்தியாவுக்காக ஆட முடிவாகியுள்ளது.

அதன்படி, 2016 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் இந்தியாவின் உள்நாட்டு கால்பந்தாட்ட தொடரான ஐஎஸ்எல் லீக்கில், சோப்ரா, கேரளா பிளாஸ்டர்ஸ் அணிக்காக விளையாட உள்ளார்.

இதற்காக பயிற்சிகளை மேற்கொண்டு வரும் இவர், இதுகுறித்து கூறியதாவது, இந்திய அணியில் விளையாடுவதற்காக என்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது குறித்து வழக்கறிஞரிடம் கலந்துரையாடியுள்ளேன்.

இதற்கு அதிகம் நேரம் தேவைப்படும், இருப்பினும் முயற்சியை கைவிடமாட்டேன், இதற்காக எனது பாஸ்போர்ட்டை திருப்பி அளிக்கவும் தயாராக இருக்கிறேன்.

கடந்த 2014 ஆம் ஆண்டு ஐ.எஸ்.எல் போட்டித்தொடரின்போது, கொல்கத்தா அணிக்காக விளையாடவிருந்த சோப்ரா காயம் காரணமாக களமிறங்கவில்லை. கடந்த ஆண்டு இவரை எந்த அணியும் தெரிவு செய்யவில்லை.

இந்நிலையில், இந்த ஆண்டு கேரளா அணிக்காக விளையாடவிருக்கிறார்.

625-0-560-320-500-400-194-800-668-160-90

SHARE