இரண்டு வருடங்களில் மலையகத்தில் காணி மற்றும் வீடு பிரச்சினைகள் பெருமளவில் நிவர்த்திக்கப்படும் பிரதமர் ரணில்

141

இரண்டு வருடங்களில் மலையக மக்களின் காணி மற்றும் வீட்டு பிரச்சினைகள் பெருமளவில் நிவர்த்தி செய்யப்படும் என பிரதமர் ரணில்  விக்கரமசிங்க தெரிவித்தார்.

 7 பேர்ச் காணி வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பிரதமர் அம்மக்களது  வீட்டு பிரச்சினைகளுக்கும் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
 பாரத பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் நிகழ்வு நேற்று நோர்வூட் நகரில் இடம்பெற்ற போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் தொடந்தும் அவர்  உரையாற்றுகையில், 2011 ம் ஆண்டு சுகாதார அமைச்சராக மைத்திரிபால சிரிசேன இருந்தபோது அடிக்கல் நாட்டிய டிக்கோயா மாவட்ட வைத்தியசாலை  நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதியான அவர் முன்னிலையில் பாரத பிரதமர் நரேந்திர மோடியினால் இன்று திறந்து வைக்கப்படுகிற்றமை நாம் அனைவரும் மகிழ்ச்சியடையகூடியது அதற்காக இந்திய அரசாங்கத்திற்கு நாம் மனப்பூர்வமானை நன்றியை தெரிவித்துகொள்கின்றோம்.

இதன் மூலம் இப்பிரதேசத்திற்கு இருந்த பாரிய குறைபாடு தீர்ந்துள்ளது.
 இலங்கையுடன் இந்திய நடபுறவு சிறப்பாக அமைய வேண்டும்  என்ற இந்திய பிரதமரின் விருப்பம் போலவே இந்தியாவுடன் நல்லுறவை பேண வேண்டுமென்பது எமது விருப்பமாகும்.
இலங்கையும் இந்தியாவும் தேயிலை உற்பத்தி நாடுகளாகும்  இலங்கையில் மலையகத்தை போன்று இந்தியாவில் அசாம் மாணிலம் தேயிலைக்கு சிறப்பானதாகும்.
 மலையகத்தில் தமிழ் சிங்களம் முஸ்லீம்கள் என மூவின மக்களும் வாழ்கின்றனர் இது சிறந்த முன்மாதிரியாகும் பெருந்தோட்ட கைத்தொழிலின் வளர்ச்சிக்கு மலையக மக்களின் பங்களிப்பு மிக முக்கியமானது.
 மலையக மக்களுக்கு அரசாங்கம் 7 பேர்ச் காணிகளை வழங்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளது அவர்களுக்கான வீட்டுத்திட்டத்தையும் நாங்கள் ஆரம்பித்துள்ளோம் இதற்கு இந்திய பிரதமரின் ஒத்துழைப்பும் கிடைக்கும் எனவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
நோட்டன்  பிரிட்ஜ். மு.இராமச்சந்திரன்
SHARE