இரத்தமாக மாறிய நீருற்றுகள்..! நாட்டை கதிகலங்க வைத்த பெண்ணிய இயக்கத்தினர்

154

சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரின் முக்கிய இடங்களில் உள்ள நீருற்றுக்கள் இரத்த நிறத்தில் இருந்ததை கண்டு மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

வரிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பெண்ணிய இயக்கத்தினரே நகரத்தில் உள்ள 13 நீருற்றுக்களில் சிவப்பு நிறத்தை கலந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் Carmen Schoder கூறியதாவது, நாட்டு மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க #happytobleed பகிர வேண்டும். எங்களது இலக்கு பெண் உடல் குறித்து ஒரு விவாதம் நடத்த வேண்டும் என்பதாகும்.

இப்போதெல்லாம் மாதவிடாய் என்பதை பல பெண்கள் அவமானமாக கருதுகின்றனர். மக்கள் சுதந்திரமாக கூற அச்சப்படுகின்றனர்.

மேலும், வரியை குறித்து விமர்சித்த அவர், சுகாதார பொருட்களுக்கு 8 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. உணவு, செய்தித்தாள்கள் அல்லது மருந்துகள் அன்றாடப் பொருட்களுக்கு 2.5 சதவீத வரி.

மாதவிடாய் காலத்தில் பெண்கள் பயன்படுத்தும் பொருள்கள் ஆடம்பர பொருகளாக கருதப்பட்டு கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு என் கண்டனங்கள்.

இந்த பொருட்கள் உண்மையில் பெண்களுக்கு அடிப்படை இல்லை என்று தெரிவிக்கும் வழி இது என Carmen Schoder குறிப்பிட்டுள்ளார்.

625-0-560-320-500-400-194-800-668-160-90-1 625-0-560-320-500-400-194-800-668-160-90-2 625-0-560-320-500-400-194-800-668-160-90-3

 

 

SHARE