இராணுவத்திடம் சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளிகளின் மர்ம உயிரிழப்பை கண்டித்தும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் ஜேர்மனியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

211

விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து சரணடைந்த பின்னர் இராணுவத்தினரால் விடுதலை செய்யப்பட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய போராளிகள் பலர் அண்மைக்காலமாக பல வகைப்பட்ட நோய்களினால் உயிரிழந்துள்ளனர்.

இதுவரையிலும் 100க்கும் மேற்பட்ட முன்னாள் போராளிகள் இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. அவர்களில் பெரும்பாலானவர்கள் புற்றுநோயினால் பாதிப்படைந்து உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (3)

இந்நிலையில் இராணுவத்திடம் சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளிகளின் மர்ம உயிரிழப்பை கண்டித்தும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் ஜேர்மனியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பேர்லின் நகரில் ஜேர்மன் வெளிவிவகார அமைச்சுக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் இன்று மாலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (1)

இதன் போது இலங்கை அரசாங்கத்தின் மறைமுக யுத்தத்தினை அம்பலப்படுத்தவும், ஜேர்மன் வெளிவிவகார அமைச்சுக்கு இதன் பயங்கரவாதத்தினை எடுத்துச் சொல்லவும் வலியுறுத்தி மனு ஒன்றும் கையளிக்கப்பட்டது.

மௌனமாக அரங்கேறிக்கொண்டிருக்கும் உயிர்க்கொலைகளை நிறுத்தவும், இவ்விடையத்தை ஜேர்மனியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும், மனிதவுரிமை அமைப்புகளுக்கு தெரியப்படுத்தும் வகையிலான செயற்பாடுகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (2) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (3)

SHARE