இராணுவ புரட்சிக்கு உதவிய 9000 அரசு ஊழியர்கள் வேலை நீக்கம்

213

துருக்கியில் ஜனாதிபதி தய்யீப் எர்டோகன் தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க இராணுவ புரட்சி நடத்தப்பட்டது. ஆனால் பொதுமக்கள் உதவியுடன் அப்புரட்சி முறியடிக்கப்பட்டது.அதை தொடர்ந்து இராணுவ புரட்சிக்கு உதவியவர்கள் மற்றும் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதையட்டி நடந்த துப்பாக்கி சண்டை மற்றும் மோதலில் 290 பேர் உயிரி ழந்தனர். 1500 இற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இராணுவ புரட்சியில் ஈடுபட்டதாக இதுவரை 8000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 34 இராணுவ தளபதிகள் அடங்குவர்.

உள்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ள தகவலில் 9000 அரசு அதிகாரிகள பதவியில் இருந்து பணி நீக்கப்பட்டுள்ளனர். ஒரு மாகாண மேயர், 29 நகர மேயர்கள், மற்றும் 8777 பொது பணியாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.turkey26

turkey27

turkey28

turkey29

turkey30

turkey38

turkey37

turkey36

turkey35

turkey34

SHARE