இரு நாடுகளுக்கிடையிலான போர் நிலைமை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது

136

எத்தியோப்பிய மற்றும் எரித்திரிய நாடுகளுக்கிடையிலான போர் நிலைமை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என இரு நாட்டுத்தலைவர்களும் ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட்டுள்ளனர்.

எரித்திரிய தலைநகர் அஸ்மராவில் நேற்று  நடைபெற்ற இரு நாட்டுத் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பின் பின்னரே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

1998 தொடக்கம் 2000ஆம் ஆண்டு வரையான எல்லை முரண்பாட்டை முடிவுக்கு கொண்டுவந்த போதிலும் சமாதான உடன்படிக்கை முழுமையாக செயற்படுத்தப்படவில்லை. அத்தோடு போர் தொடங்கியதிலிருந்து அயல் நாடுகளிடையே பதற்றம் காணப்பட்டது.

அதேநேரம் இரு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர மற்றும் வர்த்தக ரீதியான உறவுகளை மீளக் கட்டியெழுப்புவதற்கும் இரு நாடுகளும் இணக்கம் தெரிவித்துள்ளன.

எல்லை முரண்பாட்டின் பின்னர் இரண்டாகப் பிரிந்த உறவுகளுக்கு முதல்தடவையாக தொலைபேசி வாயிலாகத் தொடர்புகளை மேற்கொள்ளக் கூடியதாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

SHARE