இலங்கை கிரிக்கெட் வீரர் கித்துருவானுக்கு ஒரு ஆண்டு இடைநீக்கம்: எதற்காக தெரியுமா?

237

625.500.560.350.160.300.053.800.748.160.70 (3)

இலங்கை கிரிக்கெட் ஆணையம், இலங்கையின் இளம் கிரக்கெட் வீரரான கித்துருவான் விதானகேவை மூன்று வகையான கிரிக்கெட்டிலிருந்து ஒர் ஆண்டு இடைநீக்கம் செய்துள்ளது.

இடது கை துடுப்பாட்டகாரரான விதானகேவின் தவறான நடத்தை காரணமாக அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கிரிக்கெட் ஆணையம் தெரிவித்துள்ளது.

விதானகே குறித்து நடத்தப்பட்ட விசாரணை முடிந்த பின் ஆதாரங்கள் ஒழுங்குமுறை குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து அக்குழு உடனடியாக அவரை இடைநீக்கம் செய்ய பரிந்துரை செய்துள்ளது. இதையடுத்தே இலங்கை கிரிக்கெட் ஆணையம் அவரை இடைநீக்கம் செய்துள்ளது.

ஒரு பொது மனிதராகவும், இளைஞர்களின் முன்மாதிரியாக திகழும் விதானகேவின் தவறான நடத்தை கவனத்தில் கொண்டே இப்பரிந்துரை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஒழுங்குமுறை குழு தெரிவித்துள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு விதானகே சட்டத்தை மீறி செயல்பட்ட குற்றத்திற்காக அணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார் என்பது நினைவுக்கூரதக்கது.

மேலும், தற்போதைய இலங்கை கிரிக்கெட் ஆணையத்தின் தீர்மானத்தை விதானகே மேல் முறையீடு செய்யலாம் என கூறப்படுகிறது.

SHARE