இலங்கை மருத்துவரின் பொறுப்பற்ற செயற்பாடு! பிரித்தானியாவில் பல குழந்தைகள் மரணம்

168

பிரித்தானிய வைத்தியசாலையில் இலங்கை வைத்தியரின் மோசமான செயற்பாடு காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

வைத்தியசாலை ஒன்றில் குழந்தைகளுக்கான இதய அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவரின், நோயாளர்களை பாதுகாப்பதில் உள்ள பொறுப்பற்ற அலட்சியத்தன்மை காரணமாக உயிரிழப்புகளின் வீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2008ஆம் ஆண்டில் இருந்து 2012ஆம் ஆண்டு வரையில் இவ்வாறான அலட்சியத்தினால் ஏற்பட்ட 6 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் குறைந்த இரண்டு குழந்தைகளின் மரணம் தொடர்பில் நிஹால் வீரசேன என்ற 63 வயதுடைய வைத்திய நிபுணர் மீது தொடர்ந்து குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

7 வயதுடைய Eve Burton என்ற சிறுமிக்கு மேற்கொள்ளப்பட்ட இதய அறுவை சிகிச்சையின் பின்னர் குறித்த சிறுமி உயிரிழந்துள்ளார். அதனை தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பில் தகவல் வெளியாக ஆரம்பித்துள்ளது.

எனினும் NHSஅறக்கட்டளையின் Leeds பயிற்சி மருத்துவமனையில் சேவையில் ஈடுபட்ட வீரசேன, கடந்த 12 வருடங்களில் 39 சந்தர்ப்பங்களில் கடுமையான பிழைகளை செய்திருக்கலாம் தகவல் வெளியாகி உள்ளது.

பொது மருத்துவ கவுன்சிலினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்காக 25 சம்பவங்களை லீட்ஸ் பொது மருத்துவமனை பட்டியலிட்டுள்ளது. மற்றொரு 14 வழக்குகளில் வழக்கறிஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் 2013ஆம் ஆண்டு தகவல் வெளியாகிய சந்தர்ப்பத்தில் விசாரணை நிறைவடையும் வரையில் இதயம் தொடர்பான மருத்து நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டன.

வைத்தியசாலையின் குறித்த பிரிவில் குறைந்தது இரண்டு மடங்கு குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

வருடத்திற்கு குறித்த அறக்கட்டளைக்கு 20 மில்லியன் பவுண்ட் நிதி கிடைக்கும் நிலையில், வீரசேனவினால் மேற்கொள்ளப்பட்ட தவறுகளை மூடி மறைப்பதற்கு முயற்சிக்கப்பட்டுள்ளது.

அந்த அறக்கட்டளை பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க ‘மாறுவேடமிட்டுள்ளதாக முன்னாள் அரசாங்கத்தின் இதயம் தொடர்பிலான பேராசிரியர் Sir Roger Boyle பிபிசி உலக சேவைக்கு தெரிவித்துள்ளார். மேலும் பெருமளவு நீதிக்காக இவ்வாறு குறித்த மருத்துவமனை செயற்பட்டு வருகின்றதென தான் நினைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அறக்கட்டளை அந்த குற்றச்சாட்டை நிராகரித்துள்ளது. இந்த நேரத்தில் நிதி தொடர்பில் எதனையும் கருத்திற் கொள்ளவில்லை என அறக்கட்டளை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் பிறந்த மருத்துவர் தொடர்பிலான வருத்தமே அதிகரித்துள்ளது. விசாரணைக்கு பின்னர் இளம் பிள்ளைகளுக்கான 3 அறுவை சிகிச்சைகளை வீரசேகர நிறுத்தி விட்டார்.

இந்த சம்பவங்கள் தொடர்பில் 2011 ஆம் ஆண்டு முதல் ஆராயப்பட்டு வந்துள்ள போதிலும் குறித்த மருந்துவர் 2013ஆம் ஆண்டு வரை சத்திர சிகிச்சைகளை தொடர்ந்துள்ளார்.

அந்த பிரிவில் உள்ள வேறு பிரச்சினைகளை தன் மீது திணிப்பதாக வீரசேன குறிப்பிட்டுள்ளதாக அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் இந்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகளில் வீரசேன ஆஜராகவில்லை. எனினும் தான் வருகை தராததற்கான காரணத்தை எழுத்து மூலம் அவர் விளக்கியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவில் காணப்பட்ட நீண்டகால குறைபாடுகளுக்கு தான் பலிகடாவாகியுள்ளாதாக நிஹால் வீரசேன குற்றம் சுமத்தியுள்ளார்.

SHARE