இவருக்கு வந்த பிரச்சனை அன்று இவர்களுக்கும்! எப்போது தெரியுமா

184

விஜய் மெர்சல் படத்தில் சில அரசியல் பிரச்சனைகளை சந்தித்தார். அதற்கு முன் புலி பட பிரச்சனையின் போது இவரது வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதே போல அவரின் போக்கிரி படம் வெளியான போதும் நடந்தது.

ஆனால் விஜய் ரூ.5 கோடி ரூபாயை புலி படத்தின் போது கணக்கில் காட்டவில்லை என வருமான வரித்துறையால் சொல்லப்பட்டது. ஆனால் முறையாக பின் வரி செலுத்தினார் என தகவல் வந்தது.

இதே போல நடிகர் அஜித்துக்கு மிகவும் ட்ரண்டாக அமைந்த படம் பில்லா. இப்படம் வெளியான போது அஜித்தின் திருவான்மியூர் வீட்டில் சோதனை நடந்தது. அப்போது கொஞ்சம் ரொக்கப்பணம் இருந்ததாக தகவல் வெளியானது.

அதே போல 15 வருடங்களுக்கு மேலாக முறையாக வரி செலுத்தி வரும் ரஜினிகாந்தையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை. சந்திரமுகி படம் வந்த சமயத்தில் ரஜினியின் வீட்டில் வருமான வரி சோதனை நடந்தது.

SHARE