ஈறுதி யுத்தத்திற்கு முன்னரே தமிழினி புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார் – முன்னாள் போராளி தமிழ்கவின் பொய் பிரச்சாரம்

282

 

ஈறுதி யுத்தத்திற்கு முன்னரே தமிழினி புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார் – முன்னாள் போராளி தமிழ்கவின் பொய் பிரச்சாரம்
Tamilnini-LTTE
வவுனியா பிரதேசசெயலகத்தில் இன்று (17-08)நடைபெற்ற வவுனியாவில் நல்லிணக்க பொறிமுறைக்கான மக்கள் கருத்துக் கேட்கும் செயலமர்வில் முன்னாள் போராளி திருமதி தமிழ்கவி கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்.(வீடியோ இணைப்பு)
புனர்வாழ்வு பெற்ற பின் எந்தவிதமான உதவிகளும் அரசால் எங்களுக்கு வழங்கப்படவில்லை யுத்தத்தின் காரணமாக வட்டுவாகலிலிருந்து வரும்போது ஒரு சொப்பின் பையுடன் வவுனியாவிற்கு வந்திருந்தோம், பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை சி.ஐ.டி. விசாரணைக்கு வருவார்கள் கூட்டங்கள் வைக்கப்படும் ஆனால் உதவித்திட்டங்கள் எங்களுக்கு வழங்கப்படவில்லை. நான் ஒரு எழுத்தாளராக சர்வதேச மட்டத்தில் எழுதிக்கொண்டிருக்கிறேன் எதிர்காலத்தில் போர் நடைபெறக் கூடாது என்பதுடன் நல்லிணக்கம் என்பது மனங்களில் ஏற்பட வேண்டும் என சுட்டிக்காட்டிய அவர் அரசியல் வாதிகளால் ஒருபொதும் நல்லிணக்கத்தை ஏற்படுத்திவிட முடியாது என குறிப்பிட்டார்.
அரசியல் வாதிகள் குறிப்பிடுவதுபோல் சிங்கள மக்கள் தமிழ் மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல விடுதலைப்புலிகள் உரிமைக்காக மாத்திரமே போராடினார்கள் ஆனால் இந்த நாட்டில் மட்டும் தான் விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என சொல்கிறார்கள் இன்று வரையில் அரசாங்கத்தின் அறிக்கைகளில் பயங்கரவாதம் என்ற சொல் பாவிக்கப்படுகிறது என சுட்டிக்காட்டினார். போர் முடிந்தபின் புனர்வாழ்வு அழிக்கப்பட்டது அத்துடன் புனர்வாழ்வு அழிக்கப்பட்ட நேரத்தில் பெண்போராளிகள் இராணுவத்தினரால் துஸ்பிரயோகம் செய்யப்படவில்லையென குறிப்பிட்டார். ஊடகங்கள் நல்லிணக்கத்திற்கு எதிராக செயல்ப்படுவதாகவும் குற்றஞ்சுமத்தினார்.
பெண்களை தலைமையாகக் கொண்ட குடும்பங்கள் மற்றும் கை,கால்களை இழந்தவர்கள் கவனிக்கப்பட வேண்டும் என சுட்டிக்காட்டினார். அத்துடன் தமிழினி மற்றும் சில பெண் போராளிகளுக்கு இறுதியுத்தத்தின் முன்னரே புற்று நோய் இருந்ததாக தெரிவித்தார். விச ஊசி விவகாரத்தில் வதந்திகளை பரப்பாதீர்கள் என வேண்டுகோள் விடுத்தார்.
SHARE