ஈழத்தமிழர் ஒருவரை நாடுகடத்த கனடா அரசு தீவிர முயற்சி

306
கடந்த 1995ம் ஆண்டில் இருந்தே தீவிரவாத செயல்களில் ஈடுபட்டவர் என்ற காரணத்தை கூறி ஈழத்தமிழர் ஒருவரை கனடா அரசு நாடு கடத்த முயன்று வருகிறது.

மாணிக்கவாசகம் சுரேஷ் என்பவரையே கனடா அரசு நாடு கடத்த முயன்று வருகின்றது.

இந்த நிலையில், இதுகுறித்து குடியுரிமை மற்றும் அகதிகளுக்கான ஆணையம் கருத்து கூற மறுத்துள்ளது.

ஆனால் கடந்த 5-ம் திகதி சுரேஷ் அளித்துள்ள மனுவில், குடியுரிமை மற்றும் அகதிகளுக்கான ஆணையம் குறிப்பிட்டுள்ள கருத்தை திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

கனடாவின் சட்ட திட்டங்களின் அடிப்படையில் நாட்டில் அனுமதிக்க முடியாத நபராகவே சுரேஷ் கருதப்படுகிறார்.

கடந்த 1995-ம் ஆண்டு கைது செய்த போதே அப்போதைய லிபரல் அரசால் இந்த வழக்கு ஒப்புக்கொள்ளப்பட்டது.

தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதும் தீவிரவாத அமைப்புகளுக்காக நிதி திரட்டுவதும் ஒரே குற்றச்செயலே என நீதிமன்றம் அப்போது தெரிவிந்தது.

இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில் கடந்த 2002-ம் ஆண்டு நாடு கடத்தும் திட்டம் தலைகீழானது.

இந்நிலையில் இந்த வழக்கு குறித்து கருத்து தெரிவித்த அன்னா பாப்,

சுரேஷை நாடு கடத்துவது குறித்து உறுதியான தகவல்களை அளிக்க மறுத்தார். போதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதையடுத்து கடந்த 2008-ம் ஆண்டு கனடா நாட்டின் தீவிரவாத குழுக்கள் பட்டியலில் உலகத்தமிழர் இயக்கம் சேர்க்கப்பட்டது.

மேலும் தமிழ் புலிகளின் அறிவுறுத்தல் படியே உலகத்தமிழர் இயக்கம் கனடாவில் நிதி திரட்டியதாகவும் பொதுமக்களுக்கான வலைத்தளங்களின் பதிவிடப்பட்டன.

மேலும் உலகத்தமிழர் இயக்கம் கனடா வாழ் தமிழர்களிடம் அச்சுறுத்தியும் மிரட்டியும் நிதி திரட்டியதாகவும் அந்த வலைத்தளங்களில் கனடா அரசு குறிப்பிட்டுள்ளது.

photo: nationalpost.com

கனடிய தேசியப் பத்திரிகையின் கணிப்பில் “நாடு கடத்தப்படவுள்ள” தமிழர் சுரேஸ் மாணிக்கவாசகம்.

கனடாவில் தேர்தல் காலத்தில் தமிழர்கள் சிறப்புப் பெறுவது வழக்கம். அந்த வகையில் இப்போது மற்றைய இனத்தவர்களிற்குத் தெரிவிக்கப்படும் செய்தி திரு. சுரேஸ் மாணிக்கவாசகம் பற்றியது.

1995ல் கைது செய்யப்பட்டு மூன்று வருடங்கள் சிறையிருந்து நிபந்தனையுடன் வாழ அனுமதிக்கப்பட்ட அவரது நிலை தொடர்பாக தேர்தல் காலத்தில் வெளிவந்த செய்திகள் பிரளயமாக இருக்கின்றன.

இப்போதைய ஆங்கிலப் பத்திரிகையின் செய்தியின் தலையங்கங்கத்தைப் படிக்கின்ற எந்தக் கனேடியர்களும் ஏதோ இப்போhது விடுதலைப்புலிகள் இவரை உலகத்தமிழர் இயக்கத்தை நடாத்த அனுப்பியதாக நினைப்பார்கள்.

இப்படிக் கூடிக்குலாவிய அமைச்சர்களாக இப்படிச் செய்வார்கள் என்ற ஆதங்கம் பலருக்கும் இருந்தாலும் இல்லையில்லை கடந்த மூன்று தேர்தலிலும் தமிழர்கள் தொடர்பான வேறுவிதமான பிரச்சாரங்கள் இடம்பெற்றதை ஆதரங்கள் நிரூபிக்கின்றன.

ஆனால் அவர் பற்றி, இப்போது செய்தி வெளியிட்ட அதே நிறுவனம் 2005ல் வெளியிட்ட செய்தியின் மொழி பெயர்ப்புக் கீழேயுள்ளது.

அந்த சாதாரன மனிதர் பஸ்தரிப்பு நிலையத்தில் தனது கணணிப் பையுடன் நின்றின்றிருந்தார். அவர் எங்கே ஒரு உயர் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை செய்பவராக இருக்க வேண்டும்.

நீல நிறக் காற்சட்டை, தூய மேற்சட்டை, கறுப்புச் சப்பாத்து மற்றும் குளிருக்கு ஏற்ற அங்கியொன்றை அணிந்திருந்த அந்த மனிதர் எமது நிருபர் கதைக்க முற்பட்டபோது, மிகவும் சாதுவாகவும், மிகவும் மரியாதையாகவும் பதிலளித்தார்.

இப்பொழுது அவர் ஒரு கணணிப் பொறியியலாளர். இப்போது கணணித்துறையில் வேலை செய்துகொண்டிருக்கிறார். “நான் பஸ்ஸிற்காகக் காத்திருக்கிறேன்” என்பது தான் அவர் எமது நிருபருக்குக் கூறிய பதில். அவர் வேறுயாருமல்ல சுரேஸ் மாணிக்கவாசகம். விடுதலைப்புலிகளிற்குப் பணம் சேர்த்தார் என 1995ல் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர்.

1995 ஒக்டோபர் 18ல் இவர் கைது செய்யப்பட்ட போது கியூபெக் மாகாணத்ததைச் சேர்ந்தவர்கள் கனடாவுடன் இணைந்து வாழ்வதா அல்லது பிரிந்து செல்வதாக என்ற வாக்கெடுப்பின் முடிவுகளை கணக்கிட்டுக் கொண்டிருந்தார்கள்.

இவர் 1990ல் கனடாவிற்கு வந்ததும் உலகத்தமிழர் இயக்கத்தின் நடவடிக்கைகள் மாற்றம் பெற்றன. அதிகளவு பணம் விடுதலைப்புலிகளிற்காகச் சேர்க்கப்பட்டது என்பதே குற்றச்சாட்டு. இப்பொழுது அவரது வாழ்க்கை மாறிவிட்டது. அவர் வழக்கு, விசாரணை, குடிவரவுத்திணைக்களத்தின் கெடுபிடிகள் என வாழ்க்கையின் பாதையே மாறிவிட்டது.

“அவர் ஒரு நல்ல மனிதர்” அவருடன் வசிக்கிற அரசரட்ணம் கூறுகின்றார். “எனக்குத் தெரியும், அவர் ஒரு பண்பான மனிதர்” “மிகவும் நேர்மையான மனிதர்” “அவர் தனது இனத்தின் உரிமைகளிற்காகப் போராடியது உண்மை தான்” “அவர் எப்போதாவது ஆயுதமெடுத்துப் போராடியிருப்பார் என நான் நம்பவில்லை” “அவர் என்றுமே யாரையும் கொண்றதில்லை” “அப்படி அவர் யாரையும் துண்புறுத்தமாட்டார்” என்றார்.

பிணையில் விடுவிக்கப்பட்டதன் பின்னர் சுரேஸ் மாணிக்கவாசகம் கணிணித்துறையில் 90ற்கு மேற்பட்ட புள்ளிகளுடன் தொடர்சித்தியெய்தி இன்று ஒரு கணணிப் பொறியியலாளர். கணிணித்துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றார் என்றார் அரசரட்ணம்.

கனடாவின் இரகசியப் பாதுகாப்புப் பிரிவு அவர் கைது செய்யப்பட்டு மூன்று ஆண்டுகளின் பின்னரும் கூறியது “இவர் இப்போதும் கனடியப் தமிழ்புலிகள் பிரிவினரின் தலைவராகப் போற்றப்படுகிறார்”.

ஒவ்வொரு வாரமும் குடியகல்வு குடிவரவுத் திணைக்கள அலுவலகத்தில் கையெழுத்திட வரும் சுரேஸ் மாணிக்கவாசகத்தைப் படம்பிடிக்க முயன்ற பத்திரிகைப் படப்பிடிப்பாளரைப் பார்த்து,
“நீர் எனது வாழ்க்கையை அபாயகரமான சூழலிற்குள் எடுத்துச் செல்கின்றீர்”, “நீர் எனக்குத் தொந்தரவு தருகின்றீர்” என்றார் சுரேஸ் மாணிக்கவாசகம்.

இப்போது வந்துள்ள செய்தியில் பிரசுரிக்கப்பட்ட படம் கூட அவர் தடுக்கும் போது எடுத்ததான தோற்றப்பாட்டையே கொண்டுள்ளது.

2005ம் ஆண்டு செய்தி: http://www.canada.com/national/nationalpost/news/story.html?id=0b768a4b-4646-474a-a99e-2438f37983f3

இப்போதைய செய்தி: http://news.nationalpost.com/news/world/tamil-tiger-allegedly-sent-to-toronto-to-run-guerrilla-groups-canadian-front-ordered-deported-for-terrorism

2011ம் ஆண்டு தேர்தல் காலத்தில் வெளியிடப்பட்ட தமிழர்கள் மீதான விளம்பரத்திற்கான தமிழர்கள் அமைப்பொன்றின் கண்டன அறிக்கை: http://rabble.ca/news/2011/03/national-council-canadian-tamils-condemns-racist-conservative-party-advertisement

SHARE