உண்மையிலேயே நீங்க சூப்பர் அம்மா தான்! சுவாரசியமான உண்மை சம்பவம்

208

அவுஸ்திரேலியாவில் தன்னுடைய மகனுக்காக வாடகைத் தாயாக மாறி பேரக்குழந்தையை பெற்றெடுக்க தாய் ஒருவர் முடிவு செய்துள்ளார்.

அவுஸ்திரேலியாவை சேர்ந்தவர் Michelle Hearnden(வயது 47), இவருக்கு 9 பிள்ளைகளும், 3 பேரக்குழந்தைகளும் உள்ளனர்.

இந்நிலையில் இவருடைய மகனான Dan என்பவருக்கு குழந்தை இல்லை, இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த Dan- Kyia தம்பதியினருக்கு சந்தோஷமான தகவலை கூறியுள்ளார் Hearnden.

அதாவது, Dan- Kyia தம்பதிக்கு ஏற்கனவே கடந்தாண்டு குழந்தை பிறந்து, 5 மாதங்களில் இறந்து போனது.

குறைப்பிரவசத்தில் பிறந்ததே இதற்கு காரணம், Kyia உடல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதால் இனிமேலும் கர்ப்பமாவது உயிருக்கு ஆபத்தாக முடியும் என மருத்துவர்கள் எச்சரித்துவிட்டனர்.

என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தவர்கள், வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றெடுக்கலாம் என முடிவு செய்தனர்.

உடனே சற்றும் யோசிக்காமல், நான் பெற்றுத் தருகிறேன் என கூறியுள்ளார் Hearnden.

இதனால் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கும் Dan- Kyia தம்பதியினர், நிதி திரட்டும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

SHARE