உதயங்க வீரதுங்க டுபாயில் கைது

149

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க, டுபாயில் நேற்றுக்காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், விசாரணைகளை மேற்கொள்வதற்காகவே டுபாய் அதிகாரிகள் உதயங்க வீரதுங்கவை கைது செய்துள்ளனர்.

இதையடுத்து, உதயங்க வீரதுங்கவை இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைப்பது தொடர்பாக, டுபாய் அதிகாரிகளுடன் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு பேச்சு நடத்தி வருகிறது.

நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் மூத்த பிரதி காவல்துறை மா அதிபர் ரவி வைத்தியாலங்கார இதனைத் தெரிவித்துள்ளார்.

SHARE