உயர்தர பரீட்சை நிலையங்களை அண்மித்த பகுதிகளில் மாணவர்களுக்கு இடையூறு விளைவிக்கவேண்டாம் – போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரன் 

164
மாணவர்களது எதிர்காலத்தை நிர்ணயிக்கும் மிக முக்கியமான உயர்தர பரீட்சை நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த வேளையிலே, இப்பரீட்சையில் மாணவர்கள் சித்திபெற வேண்டி, மாணவர்களது பெற்றோர்களும், ஆசிரியர்களும் மிகுந்த ஆர்வம்காட்டிவரும் குறித்த தருணத்தில் பல பரீட்சை நிலையங்களை அண்மித்த பகுதிகளில் வாகனங்கள் மற்றும் முச்சக்கரவண்டிகளினால் ஒருசில பொதுமக்களினாலும் அதிக ஒலிகளை எழுப்பியும், பாடல்களை இசைத்தும் இடையூறுகளை விளைவிப்பதாக அமைச்சருக்கு பல்வேறு தரப்பினராலும் முறையிடப்பட்டுள்ளது.
இவ்விடயத்தை கருத்தில் எடுத்த வடக்கு போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் உடனடியாக வாகன உரிமையாளர்கள், சாரதிகள் மற்றும் முச்சக்கரவண்டி சாரதிகள் பாடசாலைகளுக்கு அண்மித்த வியாபார நிலையங்கள் உட்பட அனைவரும் பாடசாலைகளுக்கு அண்மித்த பகுதிகளில் ஒலியெழுப்பாது அமைதியைப்பேணி, எதிர்கால சந்ததியினரின் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்வதுடன், இவ்வாறு இடையூறு விளைவிப்பவர்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.
unnamed (5)
SHARE