உலகின் மிகப்பெரிய Döner Kebab கின்னஸ் சாதனை படைத்த பெர்லின்..!!

173

ஜேர்மனியின் பெர்லின் மாலில் உலகின் மிகப்பெரிய தயாரித்து கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இதன் எடை 423.5 கிலோ ஆகும், இதன்மூலம் கடந்த 2004ம் ஆண்டு அவுஸ்திரேலியர்கள் படைக்கப்பட்ட சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து KISS FMன் Big Moe என்பவர் கூறுகையில், மிகப்பெரிய ருசியான Döner Kebab தயாரிக்கப்பட்டது, உண்மையில் அதன் எடை 847 கிலோவாகும்.

இரண்டாக உடைக்கப்பட்டு 423.5 கிலோ எடை கொண்ட Döner Kebab கின்னஸ் சாதனை படைத்தது.

இரண்டும் கின்னஸ் சாதனை படைத்துள்ளது, இது பெருமையான தருணம், வெற்றி சுவையாக இருந்தது என தெரிவித்துள்ளார்.

Döner Kebab சுவையும், தரமும் அருமையாக இருந்தது என KISS FM-ன் York Strempel தெரிவித்துள்ளார்.

பெர்லின் மாலில் வைக்கப்பட்ட Döner Kebab-யை அங்கிருந்த 400க்கும் மேற்பட்டவர்கள் சுவைத்து மகிழ்ந்தனர்.

ஜேர்மனியின் பல வானொலி நிலையத்தை சேர்ந்த நபர்களும் இணைந்து இச்சாதனையை புரிந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE