உலக சிறுநீரக தினம் இன்று

233
ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் இரண்டாம் வியாழக்கிழமை ”உலக சிறுநீரக தினம்” அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த வருடத்திற்கான சிறுநீரக தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் சிறுநீரக பாதுகாப்பு, சிறுநீரக செயலிழப்பு மற்றும் அது தொடர்பான நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.

அந்த வகையில் இவ்வாண்டுக்கான சிறுநீரக தினம் ஆரம்பத்திலேயே கவனமாக செயற்படுவதன் மூலம் அனைவரையும் சிறுநீரக நோயிலிருந்து பாதுகாப்போம் (Act  Early to Prevent It!) எனும் தொனிப்பொருளில் உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் எமது நாட்டில் சிறுநீரக தினமானது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மதவாச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் இன்று இடம்பெறுவதாக சிறுநீரக நோய் தொடர்பான ஜனாதிபதியின் விசேட தலைமை நிர்வாக அதிகாரி அசேல இந்தகவலை தெரிவித்துள்ளார்.

இதேவேளை சிறுநீரக நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் செயற்திட்டத்திற்காக 900 லட்சம் உடனடியாகத் தேவைப்படுவதாக ஜனாதிபதிக்கு தன்னால் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கையில் வருடத்திற்கு 5000 சிறுநீரக நோயாளர்கள் அடையாளங் காணப்படுவதாகவும், உலகில் 2 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் பாலித மஹிபால தெரிவித்துள்ளதோடு, எதிர்வரும் காலங்களில் 367 சிறுநீரக ஒளிக்கசிவு இயந்திரங்களை அதிகரிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

SHARE