எங்கள் அணி கிண்ணத்தை வெல்லாது : கிறிஸ் கெய்ல்!!

757

GyleT20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் நட்பு சம்பியனான மேற்கிந்திய தீவுகள் தொடர்ந்தும் வெற்றியை தக்க வைப்பது கடினம் என அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்.

டுவென்டி-20 உலக கிண்ண கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 16ம் திகதி முதல் ஏப்ரல் 9ம் திகதி வரை வங்கதேசத்தில் நடக்கவுள்ளது.

கடந்த 2012ல் இலங்கையில் நடந்த தொடரில் யாரும் எதிர்பார்க்காத வகையில் மேற்கிந்திய தீவுவுகள் அணி சம்பியன் பட்டம் வென்றது.

இதன்பின் பங்கேற்ற 10 சர்வதேச டுவென்டி- 20 போட்டிகளில் ஐந்தில் மேற்கிந்திய தீவுகள் அணி தோற்றுள்ளது. இதில், கடந்த ஆண்டு பங்கேற்ற கடைசி 6 போட்டிகளில் ஐந்தில் தோல்வியடைந்தது.

இம்முறை மேற்கிந்திய தீவுகள், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலியா என வலுவான அணிகள் உள்ள இரண்டாவது பிரிவில் இடம் பெற்றுள்ளது.

இதுகுறித்து மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரர் வீரர் கிறிஸ் கெய்ல் தெரிவிக்கையில்..

வங்கதேசத்தில் நடக்கும் டுவென்டி-20 உலக கிண்ண தொடரில் சாதித்து மீண்டும் கிண்ணத்தை கைப்பற்றினால் நன்றாகத்தான் இருக்கும்.

ஆனால் மற்ற அணி வீரர்களின் திறமையை பார்க்கும் போது கிண்ணத்தை தக்கவைப்பது மிகவும் கடினம் என்றே தெரிகிறது.

முதலில் முதல் சுற்றினை தாண்டுவது தான் முதல் லட்சியமாக இருக்க வேண்டும். இதில் சாதித்து விட்டால் பின் அரையிறுதி அடுத்து இறுதிப் போட்டிக்கு செல்ல முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

அதேநேரம் சமீபத்திய டுவென்டி-20 போட்டிகளில் எங்கள் அணி சரியாக செயல்படவில்லை, பல போட்டிகளில் தோற்றுள்ளோம்.

இங்கிலாந்துக்கு எதிரான டுவென்டி-20 தொடரில் அசத்தி நாங்கள் அபாயகரமான அணி என்ற எண்ணத்தை மீண்டும் ஏற்படுத்த முடியும் என நம்புகிறேன் என கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்.

 

SHARE