எட்வட் ஸ்னோடனுக்கு தங்குமிடம் வழங்கிய இலங்கையர்களின் புகலிடக் கோரிக்கை நிராகரிப்பு

150

அமெரிக்காவின் முன்னாள் புலனாய்வு அதிகாரியான எட்வட் ஸ்னோடனுக்கு அடைக்கலம் வழங்கிய இலங்கையர்களின் புகலிடம் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

குறித்த இலங்கையர்கள் தங்கள் நாட்டில் உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்திருந்தனர். இருப்பினும் அவர்களின் நாடுகளில் பாதுகாப்பாகவே கருதப்படுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் இலங்கை அரசாங்கம் பின்னணியில் இருந்து செயற்படுவதாக குறித்த இலங்கையர்களின் சட்டத்தரணிகள் குற்றம் சுமத்தியிருந்தனர். இந்த நிலையில் விசாரணைகள் இன்றைய தினம் இடம்பெற்றது.

இதன் போதே குறித்த இலங்கையர்களின் குற்றச்சாட்டுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. மேலும், குறித்த இலங்கையர்கள் கனடாவில் புகலிடம் கோரியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவின் இராணுவ இரகசியங்களை வெளியிட்ட குற்றச்சாட்டு தொடர்பில் எட்வட் ஸ்னோடன் தேடப்பட்டு வந்துள்ளார்.இந்த நிலையில் அவருக்கு மூன்று இலங்கை புலம்பெயர் குடும்பங்கள் அடைக்கலம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

எட்வட் ஸ்னோடனுக்கு தங்குமிடம் வழங்கிய இலங்கையர்களின் புகலிடக் கோரிக்கை நிராகரிப்பு

அமெரிக்க புலனாய்வுத்துறை அதிகாரி எட்வட் ஸ்னோடனுக்குத் தங்குமிடம் வழங்கிய இலங்கையர்களின் புகலிடக் கோரிக்கையை ஹொங்கொங் நிராகரித்துள்ளது.

அமெரிக்க புலனாய்வுத் துறை அதிகாரியாகவிருந்த எட்வட் ஸ்னோடன், புலனாய்வுத் துறையின் ரகசியங்களை பகிரங்கப்படுத்திய பின்னர் அமெரிக்காவை விட்டுத் தப்பிச் சென்றிருந்தார்.

அதன் போது ஹொங்கொங்கில் அவர் மறைந்திருந்த இரண்டு வார காலத்தில் மூன்று இலங்கையர்கள் மற்றும் ஒரு பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள் அவருக்கு தங்குமிடம் வழங்கியிருந்தனர்.

குறித்த நபர்களும் ஹொங்கொங்கில் புகலிடம் கோரித் தஞ்சம் அடைந்திருந்த நிலையில் அவர்களின் கோரிக்கையை நிராகரிக்குமாறு பல்வேறு தரப்பிலிருந்தும் ஹொங்கொங் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று குறித்த மூன்று இலங்கையர் மற்றும் ஒரு பிலிப்பைன்ஸ் நாட்டவரின் புகலிடக் கோரிக்கையை நிராகரிப்பதாக ஹொங்கொங் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸில் தற்போது அச்சுறுத்தல் நிலை இல்லை என்பதைக் காரணம் காட்டியே அவர்களின் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

மேலதிக செய்தி – ஹாசிம்

SHARE