எதிர்காலத்தில் அகதிகள் ஜேர்மனியில் குடியேற முடியுமா? சந்தேகத்தை ஏற்படுத்தும் வாக்கெடுப்பு (வீடியோ இணைப்பு)

363
அகதிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் ஜேர்மன் சான்சலருக்கு எதிராக அந்நாட்டு குடிமக்கள் பெருமளவில் வாக்களித்துள்ளதால் சான்சலரின் கட்சி 2 மாகாணங்களில் படுதோல்வியை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜேர்மனியில் குடியேறும் அகதிகளுக்கு சான்சலரான ஏஞ்சலா மெர்க்கல் ஆதரவு அளித்து வருவது தொடர்பாக நேற்று 3 மாகாணங்களில் பொது வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டது.

இந்த வாக்கெடுப்பில் சான்சலரின் கிறித்துவ ஜனநாயக கட்சி(CDU), அகதிகளுக்கு எதிரான கொள்கைகளை உடைய AfD கட்சி உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன.

இந்த வாக்கெடுப்பில் ஆர்வமாக பங்கேற்ற குடிமக்கள் சான்சலரின் கட்சிக்கு எதிராக பெருமளவில் வாக்களித்துள்ளனர்.

கிறித்துவ ஜனநாயக கட்சியின் பலமான Baden-Wuerttemberg மாகாணத்தில் அக்கட்சிக்கு 27.5 சதவிகித வாக்குகளே கிடைத்துள்ளன.

இதன் மூலம், வாக்கெடுப்பு நடைபெற்ற 3 மாகாணங்களில் சான்சலரின் கட்சி ஒரு மாகாணத்தில் மட்டுமே வெற்றி பெற்றது.

ஆனால், அகதிகளுக்கு ஆதரவான AfD கட்சி வாக்கெடுப்பு நடைபெற்ற 3 மாகாணங்களிலும் வெற்றி பெற்றுள்ளதால் ஜேர்மன் குடிமக்களுக்கு அகதிகள் மீதான எதிர்ப்பு மேலும் வலுத்து வருகிறது என்பது தெளிவாகிறது.

இந்த வாக்கெடுப்பு குறித்து அரசியல் விமர்சகரான Jens Walther கருத்து கூறியபோது, ‘சான்சலரின் கட்சிக்கும் அவரது ஆதரவு கட்சிகளுக்கு இந்த வாக்கெடுப்பின் மூலம் பொதுமக்களிடையே ஆதரவு குறைந்துள்ளது என்பது தற்போது ஆதாரப்பூர்வமாக உறுதியாகியுள்ளது.

பொதுமக்களுக்கு எதிரான அரசின் அகதிகள் தொடர்பான கொள்கை முடிவுக்கு இந்த வாக்கெடுப்பு ஒரு மாபெரும் வீழ்ச்சியாக பார்க்கப்படுகிறது’ என Jens Walther கருத்து தெரிவித்துள்ளார்.

SHARE