“எரிபொருள் விலை அதிகரிக்காது”- தம்மிக்க ரணதுங்க 

160

எரிபொருள் விலைகளை அதிகரிப்பதற்கான எந்தத் திட்டமும் பெற்றோலிய கூட்டத்தாபனத்திடம் இல்லையென அந்தக் கூட்டுத்தாபனத்தின் தலைவரான தம்மிக்க ரணதுங்க தெரிவித்துள்ளார்.

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் நேற்று வியாழக்கிழமை கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பெற்றோலிய கூட்டுத்தாபனம் 300 பில்லியன் ரூபா வரை கடனில் இருந்தாலும் மக்களுக்கு பாதிப்பான வகையில் எந்தக் கட்டத்திலும் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படாது.

மானிய விலையில் மக்களுக்கு எரிபொருளை விநியோகிக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் இருக்கின்றது. இதனால் எரிபொருள் விலைகளை அதிகரிப்பதற்கான எந்த திட்டமும் எம்மிடம் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கூட்டுத்தாபனத்தில் வருமானத்தை மேலும் வலுவடையச் செய்யும் வகையில் விசேட வேலைத்திட்டங்களை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

SHARE