ஏதிலிகளுக்காக மத்திய அரசாங்கத்திடம் பணம் கேட்கும் ஒட்டாவா நகரம்

25

 

ஏதிலிக் கோரிக்கையாளர்களுக்காக, மத்திய அரசாங்கத்திடம் ஒட்டாவா நகரம் உதவி கோரியுள்ளது.

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் 32.6 மில்லியன் டொலர்களை ஒதுக்கீடு செய்ய வேண்டுமென கோரியுள்ளது.

ஒட்டாவா நகர முதல்வர் மார்க் சுட்கிளிப் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

ஏதிலி கோரிக்கையாளர்களுக்கு தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்காக இந்த உதவி கோரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நகரத்திற்குள் வரும் ஏதிலி கோரிக்கையாளர்களுக்கு அதிகளவில் உதவிகள் வழங்கப்படக்கூடிய வகையில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

நீண்ட கால அடிப்படையில் ஏதிலிகள் தொடர்பிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென கோரப்பட்டுள்ளது.

ஏதிலிக் கோரிக்கையாளர் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக வீட்டுப் பிரச்சினைகள் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

SHARE