ஏழே நாட்களில் ஒளிரும் வெண்மை பெற இது ஒன்றே போதுமானது

89

பண்டைய காலத்தில் இருந்தே சருமத்தை பராமரிப்பதற்கு மஞ்சள் பயன்பட்டு வருகிறது.

மஞ்சளில் எண்ணற்ற அழகு நன்மைகள் நிறைந்துள்ளன.

மஞ்சளில் அன்டி-செப்டிக் பொருள் அதிகம் நிறைந்திருப்பதால் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை போக்கி சருமத்திற்கு மேலும் அழகு சேர்கின்றது.

மஞ்சள் சரும அழகிற்கு எவ்வாறு உதவி செய்கின்றது என்று பார்ப்போம்.

  • மஞ்சளை நன்கு அரைத்து அதில் சிறிது கடுகு எண்ணெய் சேர்த்து கலந்து முகத்தில் தடவி ஊற வைத்து கழுவி வந்தால் இந்த ஒரு முறையினாலே சருமத்தின் கருமையை போக்கலாம்.
  • மஞ்சள் தூளை மில்க் க்ரீமுடன் சேர்த்து முகத்திற்கு ஃபேஸ் மாஸ்க் போட்டால் விரைவில் சருமம் வெள்ளையாகும்.
  • மஞ்சள் தூளை 1 மேசைக்கரண்டி தேன் மற்றும் 1/2 மேசைக்கரண்டி மைதா சேர்த்து கலந்து கட்டியான பசை போல் செய்து முகம் மற்றும் கழுத்தில் தடவி, 10 நிமிடம் ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள கருமை நீங்கி சருமம் பொலிவோடு காணப்படும்.
  • 1 மேசைக்கரண்டி மஞ்சள் பசை, சிறிது சந்தன தூள், 1 மேசைக்கரண்டி தயிர் சேர்த்து நன்கு அடித்துக் கொண்டு அந்த கலவையை சருமத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும்.
  • 1 மேசைக்கரண்டி பன்னீரில்மஞ்சள் தூள் சேர்த்து கலந்து அதில் 1/2 மேசைக்கரண்டி தயிர் சேர்த்து நன்கு அடித்து முகத்தில் தடவி ஊற வைத்து கழுவினால் சருமம் மென்மை ஆவதுடன் வெள்ளையாகவும் காணப்படும்.
  • சருமம் வெள்ளையாவதற்கு குங்குமப்பூடன் மஞ்சள் தூள் மற்றும் 1 மேசைக்கரண்டி பால் ஊற்றி நன்கு கலந்து முகத்திற்கு தடவி ஊற வைத்து கழுவினால் சரும கருமை நீங்கி முகம் உடனே பொலிவுடன் காணப்படும்.
  • முல்தானி மெட்டியை மஞ்சள் தூள் மற்றும் பாலுடன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவினால் சருமம் பளிச்சென்று காணப்படும்.
  • கடலை மாவை மஞ்சள் தூள் மற்றும் பாலில் சேர்த்து கலந்து பசைபோல் செய்து முகம், கழுத்து போன்ற கருமையான பகுதிகளில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் நீங்கி முகம் வெள்ளையாக காணப்படும்
SHARE