ஐக்கிய அமெரிக்காவில் வாழும் தொல்குடி அமெரிக்க இனக்குழுவினர்

795
                        அமெரிக்க இனக்குழுக்கள்ஆப்பலாச்சிக்கோலா பழங்குடி,  கிறீக் இனக்குழுவினரோடு உறவுடையவர்களாக இருந்த ஒரு தொல்குடி அமெரிக்கப் பழங்குடி ஆகும். இவர்களைப் பல்லச்சக்கோலா எனவும் அழைப்பதுண்டு. அவர்கள் ஹிச்சித்தி மொழிக்கு இனமான முஸ்கோஜிய மொழிகளுள் ஒன்றைப் பேசினார்கள். இவர்கள் ஆப்பலாச்சிக்கோலாஆற்றோரமாக வாழ்ந்தனர்.1706 ஆம் ஆண்டளவில் சில ஆப்பலாச்சிக்கோலா மக்கள் ஆப்பலாச்சிக்கோலா ஆற்றுப் பகுதியில் இருந்து தென் கரோலினா குடியிருப்புக்கு அண்மையில் உள்ள சாவன்னா ஆற்றுப் பகுதிக்குச் சென்றனர். 1706 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி, சாவன்னா ஆற்றுப் பகுதி ஆப்பலாச்சிக்கோலாக்கள் 80 பேர் சாவன்னா ஆற்றிலிருந்து 20 மைல் தூரத்தில் உள்ள ஒரு ஊரில் குடியேறியிருந்தனர். ஜான் பார்ண்வெல் என்பவர் 1715 இல் கூடிய திருத்தமான கணக்கெடுப்பொன்றைச் செய்தார். இது சாவன்னா ஆற்று ஆப்பாலாச்சிக்கோலாக்கள் இரண்டு ஊர்களில் வாழ்ந்ததாகக் குறிப்பிடுகிறது. இவற்றில், 64 ஆண்கள், 71 பெண்கள், 42 சிறுவர்கள், 37 சிறுமிகள் உட்பட 214 பேர் வாழ்ந்ததாகத் தெரிகிறது.1715 ஆம் ஆண்டின் யமாசிப் போரில் இவர்களும் தென் கரோலினா மீதான தாக்குதலில் பங்கேற்றனர். பின்னாளில் இப்போரில் தப்பியவர்கள், மீண்டும், சட்டகூச்சி ஆறு, ஃபிளிண்ட் ஆறு ஆகியவை சந்திக்கும் இடத்திற்கு அருகில், ஆப்பலாச்சிக்கோலா ஆற்றுப் பகுதிக்கு வந்தனர்.1833 இலும், 1834 இலும் செய்துகொள்ளப்பட்ட இரண்டு இந்தியர் அகற்றல் சட்ட ஒப்பந்தக்களுக்கு அமைய இவர்கள் இன்றைய ஒக்லஹோமாவுக்கு இடம்பெயர்ந்தனர். ஆப்பலாச்சிக்கோலா ஆறு, புளோரிடாவில் உள்ள ஆப்பலாச்சிக்கோலா நகரம் என்பன இவர்களுடைய பெயரைத் தழுவி இடப்பட்ட பெயர்கள் ஆகும்.
                       சிக்காசோ ஐக்கிய அமெரிக்காவில் வாழும் தொல்குடி அமெரிக்க இனக்குழுவினர் ஆவர்.இவர்கள் முன்னர் அலபாமாவின்,ஹண்ட்ஸ்வில் பகுதிக்கு மேற்கில் மிசிசிப்பி, தென்னசிப் பகுதிகளில் அமைந்திருந்த தென்னசி ஆற்றோரம்வாழ்ந்து வந்தனர்.ஐரோப்பியர் வருகைக்கு முன்னர் இவர்கள் அங்கிருந்து கிழக்காகச் சென்று, மிசிசிப்பி ஆற்றின் கிழக்குப் பகுதியில் குடியேறினர். சிக்சோக்கள், முதல் ஐரோப்பியர் வருகையில் இருந்து பலவந்தமாக ஒக்லஹோமாவுக்குத் துரத்தப்படும் வரை வடகிழக்கு மிசிசிப்பியில் வாழ்ந்து வந்ததாகவே எல்லா வரலாற்றுப் பதிவுகளும் குறிப்பிடுகின்றன.இவர்கள்,சிக்காசோ மொழி போன்ற ஒரு மொழியைப் பேசும் சொக்ட்டோக்களுக்கு உறவுடையவர்கள்.இவ்விரு மொழிகளும் சேர்ந்து முஸ்கோஜிய மொழிகளின் மேற்குக் குழுவை உருவாக்குகின்றன.சிக்காசோக்கள் இரண்டு பிரிவினராக உள்ளனர்.இப்பிரிவுகள், இம்ப்சக்தயா, இஞ்சுத்வாலிப்பா என்பனவாகும்.இந்தியர் அகற்றல் சட்டத்தின் அடிப்படையில் ஒக்லஹோமாவுக்கு அகற்றப்பட்ட ஐந்து நாகரிகமுற்ற பழங்குடிகளுள் இக் குழுவினரும் அடங்குவர்.இவ்வினக்குழுவினர் அரசினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தேசிய இனங்களுள் 13 ஆவது பெரிய பழங்குடியாகும்.
ஒக்லஹோமா சொக்ட்டோ தேசம், ஐக்கிய அமெரிக்கா, ஒக்லஹோமா ஆகியவற்றின் அரசுகளுடன் சிறப்புத் தொடர்புகளைப் பேணிவருகின்ற ஒரு இறைமையுள்ள தேசம் ஆகும். இங்கே சுமார் 250,000 மக்கள் வாழ்கின்றனர். சொக்ட்டோ தேசத்தின் தலைமையகம் ஒக்லஹோமாவின் துரந்த் நகரில் அமைந்துள்ளது. ஒக்லஹோமாவின்துஷ்கஹோமாவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கவுன்சில் ஹவுஸ் இன்று சொக்ட்டோ அருங்காட்சியகத்தையும், நீதித்துறையின் நீதிமன்றத் தொகுதியையும் கொண்டுள்ளது. சொக்ட்டோ தேசம், ஒக்லஹோமா சொக்ட்டோக்கள் எனப்படும் தொல்குடி அமெரிக்கர்களின் இன்றைய தாயகமாக உள்ளது. இவர்கள் 1831 க்கும் 1838 க்கும் இடையில் அவர்களில் மூலத் தாயகப் பகுதிகளிலிருந்து பலவந்தமாக ஒக்லஹோமாவின் இப்பகுதிக்கு அகற்றப்பட்டனர். இங்கே அவர்கள், ஒக்லஹோமா சொக்ட்டோ தேசம் என்ற பெயரில் ஒழுங்குபடுத்தப்பட்டனர். இவ் வெளியேற்றம் 20 ஆம் நூற்றாண்டுத் தொடக்கம் வரை தொடர்ந்ததாகச் சொல்லப்படுகிறது. 1903 ஆம் ஆண்டில் 300 சொக்ட்டோக்கள் ஒக்லஹோமா சொக்ட்டோ தேசத்துக்கு அனுப்பப்பட்டதாகத் தெரிகிறது.ஒக்லஹோமா சொக்ட்டோ தேசம் சுமார் 11,020 சதுரமைல் (28,500 கிமீ2) பரப்பளவு கொண்டது. இதில், தென்கிழக்கு ஒக்லஹோமாவிலுள்ள 10 1/2 கவுண்டிகள் அடங்கியுள்ளன. இவை அட்டோக்கா கவுண்டி, பிரையன் கவுண்டி, சொக்ட்டோ கவுண்டி, கோல் கவுண்டி, ஹஸ்கெல் கவுண்டி, ஹியூகெஸ் கவுண்டியின் அரைப்பகுதி, லாட்டிமெர் கவுண்டி, லே புளோர் கவுண்டி, மக்கர்ட்டன் கவுண்டி, பிட்ஸ்பர்க் கவுண்டி, புஷ்மத்தாஹா கவுண்டி என்பனவாகும். இத் தேசத்தின் பழங்குடித் தலைமையகம், ஒக்லஹோமாவின் தூரந்த்தில், மூன்று மாடிக் கட்டிடங்களையும், ஒரு தளக் கட்டிடங்களையும் கொண்ட ஒரு கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ளது. சொக்ட்டோ பழங்குடி, சொக்ட்டோ தேசஅரசியலமைப்பினால், ஆளப்படுகின்றது. இந்த அரசியலமைப்பு, 1984 ஜூன் 9 ஆம் தேதி மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த அரசியலமைப்பின் கீழ், அரசின் நிறைவேற்றுப் பிரிவு, சட்டவாக்கப் பிரிவு, நீதிப் பிரிவு என்னும் பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. சொக்ட்டோப் பழங்குடிகளின் தலைவர் நான்கு வருடங்களுக்கு ஒரு தடவை மக்களால் தெரிந்தெடுக்கப்படுகிறார். இவர் பழங்குடிப் பேரவையின் (Tribal Council) வாக்களிக்கும் உரிமையுள்ள ஒரு உறுப்பினர் அல்ல. பழங்குடியின் சட்டவாக்க அதிகாரம் 12 உறுப்பினரைக் கொண்ட பழங்குடிப் பேரவையிடம் உள்ளது. இந்தப் பேரவை உறுப்பினர்கள் சொக்ட்டோ மக்களால் தேர்வு செய்யப்படுகின்றனர்.
செமினோலேஎன்பது, தொடக்கத்தில், புளோரிடாவிலும், தற்போது புளோரிடாவிலும், ஒக்லஹோமாவிலும் வாழும் தொல்குடி அமெரிக்க மக்களைக் குறிக்கும். செமினோலே தேசிய இனம் 18 ஆம் நூற்றாண்டளவில் உருவானது. இது, பல இனக்குழுக்களைத் தன்னுள் அடக்கியுள்ளது. ஜோர்ஜியா, மிஸ்சிசிப்பி, அலபாமா ஆகிய இடங்களைச் சேர்ந்த தொல்குடி அமெரிக்கர், முக்கியமாகக் கிறீக் தேசிய இனம்; தென் கரோலினா, ஜோர்ஜியா ஆகிய பகுதிகளில் அடிமைத் தளையில் இருந்து தப்பிய ஆபிரிக்க அமெரிக்கர் என்போர் இவ்வினத்தாருள் அடங்குவர். ஒக்லஹோமாத் தேசிய இனத்தவர் உட்பட ஏறத்தாழ 3,000 செமினோலேக்கள் மிஸ்சிசிப்பி ஆற்றுக்கு மேற்குப் பக்கம் துரத்தப்பட்டபோது, பல புதிய உறுப்பினர்களையும் அவர்கள் வழியில் இணைத்துக் கொண்டனர். சுமார் 300 – 500 செமினோலேக்கள், புளோரிடாவின் எவர்கிளேட்ஸ் பகுதியில் தங்கி இடப்பெயர்வுக்கு எதிராகப் போராடிவந்தனர். இப் போரில் சுமார் 1,500 வரையான அமெரிக்கப் படையினர் இறந்து போனதாகச் சொல்லப்படுகின்றது. செமினோலேக்கள் என்றும் ஐக்கிய அமெரிக்க அரசிடம் சரணடையவில்லை. இதனால் புளோரிடாவின் செமினோலேக்கள் தங்களை அடங்கா மக்கள் (Unconquered People) எனக் குறிப்பிட்டுக் கொள்கின்றனர். புளோரிடா செமினோலேக்கள் மட்டுமே ஐக்கிய அமெரிக்க அரசுடன் முறையான ஒப்பந்தம் எதையும் செய்துகொள்ளாத அமெரிக்க இந்தியப் பழங்குடியாகும். இன்று அவர்களுக்கு அவர்கள் நிலத்தின் மீது தன்னாதிக்கம் உண்டு. அவர்களுடைய பொருளாதாரம், புகையிலை வணிகம், சுற்றுலா, சூதாட்டம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளது. புளோரிடாவை எசுப்பானியர்கள் கைப்பற்றியபோது அங்கு வாழ்ந்த தொல்குடியினர் பலர் நோய் வாய்ப்பட்டு இறந்தனர். பிரித்தானியர், 1763 ஆம் ஆண்டில் புளோரிடாவைக் கைப்பற்றியபோது, தப்பிய சிலரையும் எசுப்பானியர் கியூபாவுக்கு அனுப்பியதாகச் சொல்லப்படுகின்றது. 18 ஆம் நூற்றாண்டில், கீழ் கிறீக் தேசிய இன மக்கள், மேல் கிறீக் மக்களின் மேலாதிக்கத்தில் இருந்து தப்பிக் கொள்வதற்காக புளோரிடாவுக்கு இடம் பெயர்ந்தனர். அவர்கள் அங்கு ஏற்கெனவே இருந்த தொல்குடிகளுடன் கலந்தனர். அங்கிருந்த தொல்குடிகளுள், யமாசிப் போரில் அகதிகளாக இடம்பெயர்ந்த யூச்சியமாசி போன்ற பிற குடிகளும் அடங்குவர். இவர்கள் அனைவரும் செமினோலேக்கள் என அழைக்கப்பட்டனர். செமினோலே எனும் சொல், ஓடியவர்கள் எனப்பொருள் தரும் எசுப்பானிய மொழிச் சொல்லிலிருந்து வந்த, கிறீக் மொழிச் சொல்லான சிமானோ-லி என்பதிலிருந்து உருவானது. செமினோலேக்கள் ஒரு கலப்பு இனத்தவராவர். ஜார்ஜியாவிலிருந்து வந்த கீழ் கிறீக் இனத்தவர், மிக்காசுக்கி மொழி பேசும் முஸ்கோஜிகள், தப்பிய ஆபிரிக்க அமெரிக்க அடிமைகள், குறைந்த அளவில் பிற அமெரிக்க இந்தியப் பழங்குடி இனத்தவர் மற்றும் ஐரோப்பியர் என்போர் இக் கலவையில் அடங்குவர். இணைந்த செமினோலேக்கள் இரண்டு மொழிகளைப் பேசினர். அவை தொல்குடி அமெரிக்க மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த இரு உறுப்பு மொழிகளான கிறீக், மிக்காசுக்கி என்பனவாகும். மொழி அடிப்படையில் மட்டுமே தற்கால புளோரிடாவின் மிக்கோசுக்கி பழங்குடிகள் தங்கள் அடையாளத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கின்றனர்.
                              செரோக்கீ (Cherokee) எனப்படுவோர் வட அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்ட ஒரு இனக்குழுவாகும். 16 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர் அமெரிக்காவுக்கு வந்தபோது, இவர்கள் இன்றைய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஐக்கிய அமெரிக்கப் பகுதிகளில் வாழ்ந்து வந்தனர். 1830களில் இவர்களுட் பெரும்பாலானவர்கள், வலுக்கட்டாயமாக ஓசார்க் சமவெளிக்கு மேற்குப்புறமாக இடம் பெயர்க்கப்பட்டனர். ஐந்து நாகரிகமுற்ற பழங்குடிகள் எனப்படும் பழங்குடிகளுள் இவர்களும் அடங்குவர். 2000 ஆவது ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, ஐக்கிய அமெரிக்காவில் வாழும், 563 அங்கீகரிக்கப்பட்ட அமெரிக்க இந்தியர்களுள் அதிகமானவர்கள் இவர்களே.
 கண்ணீர்த் தடங்கள்  1838 ஆம் ஆண்டில், செரோக்கீ இனத்தவரை, அவர்களுடைய தாயகமான ஜோர்ஜியாவிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றி மேற்கு ஐக்கிய அமெரிக்காவில் உள்ள இந்தியப் பகுதி என அன்று அழைக்கப்பட்ட ஒக்லகோமாவுக்கு அனுப்பப்பட்ட நிகழ்வே கண்ணீர்த் தடங்கள் (Trail of Tears) எனக் குறிப்பிடப்படுகின்றது. இந் நிகழ்வின்போது 5,000 வரையான செரோக்கீகள் இறந்து போனதாகச் சொல்லப்படுகிறது. செரோக்கீ மொழியில் இது, நுன்னா டவுல் இசுன்யி எனப்படுகின்றது. இதன் பொருள் “அவர்கள் அழுத தடம்” என்பதாகும். அமெரிக்க இந்தியர்களை வெளியேற்றும் ஐக்கிய அமெரிக்காவின் முயற்சி இது மட்டும் அல்ல. பிற தொல்குடி அமெரிக்க இனத்தவர்களும், இந்தியானா, புளோரிடா ஆகிய இடங்களிலிருந்து அகற்றப்பட்டனர். செமினோலே இனத்தவர்கள் ஐக்கிய அமெரிக்காவின் இம் முயற்சியை எதிர்த்துக் கரந்தடி (Guerrilla) முறையில் போரிட்டனர். ஓராண்டு காலம் வரை அமெரிக்க அரசை வெற்றிகரமாகத் தோற்கடித்து வந்தனர் எனினும், அவர்களது அன்புக்கு உரியவனும், துணிவுள்ளவனுமான தலைவன் ஒசியோலாவின் இழப்பினால் தோற்றனர். கண்ணீர்த் தடங்கள் என்பது, பிற இந்தியக் குழுக்கள் தொடர்பிலான பலவந்தமான இடப்பெயர்வு நிகழ்வுகளையும் குறிக்கப் பயன்படுவது உண்டு. இச் சொற்றொடர்ப் பயன்பாடு 1831 ஆம் ஆண்டில் சொக்டாவ் இனத்தவர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டபோது உருவானது.
சொக்ட்டோ (Choctaw) எனப்படுவோர், தொடக்கத்தில், மிசிசிப்பி, அலபாமா, லூசியானா ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய தென்கிழக்கு ஐக்கிய அமெரிக்காவில் வாழ்ந்த தொல்குடி அமெரிக்க இனக்குழு ஆகும். இவர்கள் பேசும் மொழி முஸ்கோஜிய மொழிக்குழுவைச் சேர்ந்தது. இவர்கள், மிசிசிப்பி ஆற்றுப் பள்ளத்தாக்கு முழுவதும் பரவியிருந்த மிசிசிப்பிப் பண்பாட்டின் ஒரு பகுதியினர் ஆவர். எசுப்பானியப் பயணிகள் இவர்களை முதன்முதலாகக் கண்டதாக நம்பப்படுகிறது. 19 ஆம் நூற்றாண்டில் இவர்களுக்கு அயலவர்களாக இருந்த ஐரோப்பிய அமெரிக்கக் குடியேற்றக்காரரின் பண்பாடு மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் பலவற்றை இவர்கள் பின்பற்றி வந்தனர். இதனால் அக்காலத்தில் சொக்ட்டோக்கள், ஐரோப்பிய அமெரிக்கர்களால், ஐந்து நாகரிகமுற்ற பழங்குடிகளுள் ஒரு பழங்குடியாகக் கொள்ளப்பட்டனர். தெற்குப் பகுதியிலும் சில் சொக்ட்டோக் குழுக்கள் இருந்தாலும், ஒக்லஹோமா சொக்ட்டோ தேசமும், மிசிசிப்பி சொக்ட்டோ இந்தியக் குழுவுமே முதன்மையான சொக்ட்டோ சமூகங்கள் ஆகும். ஜனாதிபதி ஆண்ட்ரூ ஜாக்சன், சொக்ட்டோக்களில் வெளியேற்றத்தை இந்தியர் அகற்றல் செயற்பாடுகளுக்கு ஒரு மாதிரியாகக் கொண்டார். முதலாவது கண்ணீர்த் தடங்கள் பயணத்தை மேற்கொண்டவர்கள் சொக்ட்டோக்களே ஆவர். 1831 ஆம் ஆண்டில், ஆடும் முயல் வெளி ஒப்பந்தம் (Treaty of Dancing Rabbit Creek) எனப்படும், சொக்டோக்களை வெளியேற்றும் ஒப்பந்தத்தின்படி, ஒக்லஹோமாவுக்குச் சென்றவர்கள் போக, புதிதாக உருவான மிசிசிப்பி மாநிலத்திலேயே சில சொக்ட்டோக்கள் தங்கிவிட்டனர். இவர்களே முதன்முதலாக ஐக்கிய அமெரிக்கக் குடியுரிமை பெற்ற முக்கியமான ஐரோப்பியர் அல்லாத இனத்தவர் ஆவர். பெரிய ஐரிஷ் பஞ்சம் (1845–1849), ஏற்பட்ட காலத்தில் அவர்களுக்குத் தாராளமாக மனிதாபிமான உதவிகளைச் செய்தது தொடர்பாகவும் இவர்கள் நினைவு கூரப்படுகிறார்கள். அமெரிக்க உள்நாட்டுப் போர்க் காலத்தில் ஒக்லஹோமாவிலும், மிசிசிப்பியிலும் இருந்த சொக்ட்டோக்கள் பெரும்பாலும் கூட்டமைப்புக்கே ஆதரவாக இருந்தனர்.
                                சோஷோன் (Shoshone) எனப்படுவோர் வட அமெரிக்காவில் வாழும் பழங்குடிகளாவர். இவர்கள் வடக்கு, மேற்கு மற்றும் கிழக்கு சோஷோன்கள் என மூன்று பெரும் பிரிவுகளாக வாழ்கிறார்கள். இவர்களில் வடக்கு சோஷோன்கள் கிழக்கு இடாகோ, மேற்கு வயோமிங், மற்றும் வட-கிழக்கு யூட்டா ஆகிய இடங்களில் வசிக்கிறார்கள். கிழக்கு சோஷோன்கள் வயோமிங், வடக்கு கொலராடோ, மொன்டானா ஆகிய மாநிலங்களில் வசித்து வந்தார்கள். 1750ம் ஆண்டளவில் ஏனைய பழங்குடிகளுடன் ஏற்பட்ட முரண்பாடுகளினால் இவர்கள் தெற்கு மற்றும் மேற்கு நோக்கி நகர்ந்தார்கள். மேற்கு சோஷோன்கள் நடு இடாகோ, வடமேற்கு யூட்டா, நடு நெவாடா மற்றும் கலிபோர்னியா ஆகிய இடங்களில் வசிக்கிறார்கள். இக்குழுவினர் பனாமிண்ட் (Panamint) என்ற பெயரிலும் அழைக்கப்படுகின்றனர். மேற்கு சோஷோன்களின் இடாகோ குழுவினர் டுக்குவாடுக்கா (Tukuaduka), அதாவது ஆடு தின்னிகள் எனவும், நெவாடா/யூட்டாக் குழுக்கள் கோசியூட் (Gosiute) அல்லது டோய் டிக்கூட்டா எனவும் அழைக்கப்படுகின்றனர். 1845 இல் வடக்கு மற்றும் மேற்கு சோஷோன்களின் மொத்தத் தொகை கிடட்த்தட்ட 4,500 ஆக இருந்தது. 1937 இல் 3,650 வட சோஷோன்களும் 1,201 மேற்கு சோஷோன்களும் கணக்கெடுக்கப்பட்டார்கள். 1860 இல் இடாகோ மாநிலத்தில் ஆங்கிலக் குடியேற்றவாசிகளுடன் இடம்பெற்ற மோதலில் (பெயார் ஆற்றுப் படுகொலைகள்) பல நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். ஆனாலும் 1876 இல் அவர்களது பரம்பரை எதிரிகளான லக்கோட்ட மற்றும் செயன் ஆகிய பழங்குடிகளுடன் இடம்பெற்ற மோதல்களில் ஆங்கிலேயருடன் இணைந்து போரிட்டார்கள். 1878 இல் பானொக் பழங்குடிகளுடன் இடம்பெற்ற சமரில் போரிட்டனர். 1982 இல் மேற்கு சோஷோன்கள் தமது விடுதலையை அறிவித்து மேற்கு சோஷோன் தேசிய கவுன்சில் என்ற பெயரில் தனிக் கடவுச்சீட்டையும் வெளியிட்டார்கள்.
  ஐந்து நாகரிகமுற்ற பழங்குடிகள் என்னும் பெயர், தொல்குடி அமெரிக்கத் தேசிய இனங்களான செரோக்கீ, சிக்காசோ, சொக்ட்டோ, கிறீக், செமினோலே ஆகிய ஐந்து பழங்குடிகளை ஒருங்கே குறிக்கிறது. அக்காலத்தில் ஐரோப்பியக் குடியேற்றக்காரரின் பழக்க வழக்கங்களை இவர்கள் பின்பற்றியதாலும், தமது அயலவருடன் நல்ல தொடர்புகளைக் கொண்டிருந்ததாலும் இவர்கள் இவ்வாறு குறிப்பிடப்பட்டனர். அமெரிக்காவின் பிற பகுதிகளுக்கு, குறிப்பாகப் பிற்காலத்து ஒக்லஹோமாவுக்கு இடம் பெயர்க்கப்படும் முன், இவர்கள் தென்கிழக்கு ஐக்கிய அமெரிக்காவில் வாழ்ந்துவந்தனர். இன்று பல அமெரிக்க இந்தியர்கள், சிறப்பாக மேற்படி ஐந்து இனங்கள் தவிர்ந்த ஏனையோர் ஐந்து நாகரிகமுற்ற பழங்குடிகள் என்னும் பெயர் இனவாதத் தன்மை கொண்டது என எண்ணுகின்றனர். குறிப்பிட்ட ஐந்து பழங்குடியினருக்கு இவ்வாறு பெயரிடுவதன் மூலம் ஏனைய பழங்குடியினர் நாகரிகம் அற்றவர்கள் என்னும் தொனி தெளிவாக இருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அது மட்டுமன்றி மேற்படி ஐந்து பழங்குடிகளும் தங்கள் சொந்தப் பண்பாட்டைக் கைக்கொண்டிருக்கும் வரை நாகரிகம் அற்றவர்களாக இருந்தார்கள் என்றும், ஐரோப்பியப் பண்பாட்டை ஏற்றுக்கொண்ட பின்னரே நாகரிகம் அடைந்தார்கள் என்றும் இப்பெயர் சொல்கிறது. இப் பழங்குடிகள், தமது தாயகப் பகுதிகளான மிசிசிப்பி ஆற்றின் கிழக்குப் பக்கமிருந்து இடம் பெயர்க்கப்பட்டனர். இந்த இடப்பெயர்வுகள், மத்திய அரசின் சட்டவாக்கங்களின் துணையுடன், பல பத்தாண்டுகளாக நடைபெற்று, இம்மக்கள், அன்று இந்தியப் பகுதி என அழைக்கப்பட்ட, இன்றைய ஒக்லஹோமாவின் கிழக்குப் பகுதிக்கு அனுப்பப்பட்டனர். இவற்றுள் மிகவும் மோசமான இடப்பெயர்வு 1838 ஆம் ஆண்டின் கண்ணீர்த் தடங்கள் (Trail of Tears) எனப்பட்ட இடப்பெயர்வு ஆகும். அமெரிக்க உள்நாட்டுப் போர்க் காலத்தில், இந்த ஐந்து பழங்குடிகளும், பிரிந்து போரிட்டனர். சொக்ட்டோ, சிக்காசோ என்னும் இரண்டு பழங்குடிகளும் கூட்டமைப்பின் பக்கம் நின்றனர். கிறீக், செமினோலே, செரோக்கி பழங்குடிகள் தங்களுக்குள் பிரிந்து ஒரு பிரிவினர் ஐக்கிய அமெரிக்காவின் பக்கமும் மற்றப் பிரிவினர் கூட்டமைப்பையும் ஆதரித்து நின்றனர்.                                                          

இதர இனக்குழுக்கள்.

Picture

கிறீக் இனக்குழு (Creek) என்பது தொடக்கத்தில்தென்கிழக்கு ஐக்கிய அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்டிருந்ததொல்குடி அமெரிக்க இனத்தைக் குறிக்கும். இவர்கள் தங்கள் இனத்தை முஸ்கோஜி (Muscogee) என்னும் பெயரால் அழைக்கின்றனர். இவர்கள் தற்காலத்தில் ஒக்லஹோமா, அலபாமா, ஜார்ஜியா, புளோரிடா ஆகிய ஐக்கிய அமெரிக்க மாநிலங்களில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் பேசும் ம்விஸ்கோக்கே (Mvskoke) அல்லது கிறீக் மொழிமுஸ்கோஜிய மொழிக் குடும்பத்தின் கீறீக் துணைப் பிரிவைச் சேர்ந்தது. செமினோலேக்கள் இவர்களுக்கு நெருங்கிய இனத்தவராவர். அவர்களும் கிறீக் பிரிவு மொழியொன்றையே பேசுகின்றனர். ஐந்து நாகரிகமுற்ற பழங்குடிகள் எனக் குறிப்பிடப்படும் பழங்குடிகளுள் கிறீக் இனத்தவரும் அடங்குவர்.
 வரலாற்றின் தொடக்க காலத்தைச் சேர்ந்த கிறீக் மக்கள், மண்மேடு கட்டிகள் என வரலாற்றாளர்களால் குறிப்பிடப்படும், தென்னசி ஆற்றோரம் அமைந்திருந்தமிசிசிப்பிப் பண்பாட்டு மக்களின் வழி வந்தவர்களாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. இந்நாகரிகம் இன்றைய தென்னசி (Tennessee), அலபாமா, தென் ஜார்ஜியாவில் உள்ள உத்தினாகிக்கா (Utinahica) ஆகிய இடங்களில் பரந்து இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. ஒரு தனிப் பழங்குடி என்பதிலும், பல குழுக்கள் இணைந்த ஒரு தொகுதியாக, ஆற்றுப் பள்ளத்தாக்குப்பகுதிகளில் இருந்த தன்னாட்சித் தன்மை கொண்ட ஊர்களில் இவர்கள் வாழ்ந்து வந்தனர். இவ்வூர்கள், இன்றைய தென்னசி, ஜார்ஜியா, அலபாமா ஆகிய மாநிலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்தன. இம்மக்களுள், பல இனத்தவரும், ஹிச்சித்தி,அலபாமாகௌஷாத்தா போன்ற பல தனித்துவமான மொழிகளைப் பேசுவோரும் இருந்தனர்.
ஒக்முல்கீ ஆற்றங்கரையோரம் வாழ்ந்த இவ்வினத்தவரை கிறீக் இந்தியர்கள் எனத் தென் கரோலினாவில் இருந்து வந்த பிரித்தானிய வணிகர்கள் அழைத்தனர். இது வே தொடர்ந்து அப் பகுதியில் எல்லா ஆற்றங்கரையோர மக்களையும் குறிக்கும் பெயர் ஆயிற்று. இம்மக்களிடையே கீழ் நகரத்தார் மேல் நகரத்தார் என்ற பிரிவுகள் ஏற்படத் தொடங்கின. ஜார்ஜியா எல்லையோரப் பகுதியில் சட்டகூச்சி ஆறு, ஒக்மல்கி ஆறு, ஃபிளிட் ஆறு ஆகியவற்றின் கரைகளில் அமைந்த நகரங்கள் கீழ் நகரங்களாகவும், அலபாமா ஆற்றுப் பள்ளத்தாக்கு நகரங்கள் மேல் நகரங்கள் ஆகவும் இருந்தன. கீழ் நகரங்களுள், கொவேத்தாகுசேத்தா, மேல் செகாவ், ஹிச்சித்தி, ஓக்கோனி, ஒக்மல்கீ, அப்பலாச்சி, யமாசி, ஒக்புஸ்கி, சவோக்லி, தமாலி ஆகிய நகரங்கள் அடங்கியிருந்தன. துக்காபச்சி, அபிக்கா, குசா, இத்தாவா, ஹோத்லிவாகி, ஹிலிபி, இயுஃபோலா, வாக்கோகை, அத்தாசி, அலிபாமு, கோஷாத்தா, துஸ்கேஜீ ஆகிய நகரங்கள் மேல் நகரங்கள் ஆகும் கொவேத்தா, குசேத்தா ஆகிய இரு நகரங்களுமே கிறீக் தேசிய இனத்தாரின் முக்கிய நகரங்களாக இன்றுவரை உள்ளன. மரபு வழியாக குசேத்தா, கொவேத்தா குழுக்களே கிறீக் தேசிய இனத்தின் உறுப்பினராகக் கருதப்பட்டனர். அமெரிக்கப் புரட்சியின்போது, மிசிசிப்பி ஆறு, லூசியான ஆறு ஆகியவற்றுக்குக் கிழக்கே இருந்த பல தொல்குடி அமெரிக்க இனக்குழுக்களைப் போலவே கிறீக் இனத்தவரும், எப்பகுதியை ஆதரிப்பது என்பதில் பிரிந்து இருந்தனர். கீழ் கிறீக்குகள் நடுநிலை வகிக்க, மேல் கிறீக்குகள் பிரித்தானியருக்கு ஆதரவாக அமெரிக்கருடன் போரிட்டனர். 1783 ஆம் ஆண்டில், போர் முடிவடைந்த பின்னர், பிரித்தானியர் கிறீக் நிலங்களை புதிய ஐக்கிய அமெரிக்காவுக்கு விட்டுக்கொடுத்ததை அறிந்தனர். ஜார்ஜியா மாநிலம் கிறீக் நிலப் பகுதிகளுக்குள் விரிவடையத் தொடங்கியது. கிறீக் அரசியல் தலைவனான அலெக்சாண்டர் மக்கில்லிவ்ரே (Alexander McGillivray) இத்தகைய ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக பரந்த தொல்குடியினரின் அமெரிக்க எதிர்ப்புப் போராட்டங்களை ஒழுங்கு செய்தார். அத்துமீறும் ஜார்ஜியர்களுடன் போரிட புளோரிடாவில் இருந்த எசுப்பானியரிடம் இருந்து ஆயுதங்களும் அவருக்குக் கிடைத்தன. தனித்தனியாக அமெரிக்காவுக்குத் தங்கள் நிலங்களை விற்ற ஊர்த் தலைவர்களைச் சமாளிக்க வேண்டி இருந்ததுடன், கிறீக் அதிகாரத்தை மையப்படுத்தவும், கிறீக் தேசிய உணர்வை உருவாக்கவும், மக்கில்லிவ்ரே உழைத்தார். 1790 இல் செய்துகொள்ளப்பட்ட நியூ யார்க் ஒப்பந்தத்தின் மூலம், எஞ்சிய பகுதியில் கிறீக் தன்னாட்சியை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளும் என்ற நிபந்தனையுடன், கிறீக் நிலங்களின் குறிப்பிடத்தக்க அளவு பகுதியை ஐக்கிய அமெரிக்காவுக்கு விட்டுக்கொடுக்க மக்கில்லிவ்ரே உடன்பட்டார். ஆனால் மக்கில்லிவ்ரே 1793 ஆம் ஆண்டில் இறக்கவே, ஜார்ஜியர்கள், கிறீக் நிலப் பகுதிகளுக்குள் தங்கள் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்தனர்.
கனேடிய இனக்குழுக்கள்
எஸ்கிமோக்கள் எனப்படுவோர் வடதுருவப் பகுதிகளில் வாழும் பழங்குடி மக்கள். எஸ்கிமோ என்றால் அவர்கள் மொழியில் இறைச்சியை பச்சையாகச் சாப்பிடுபவர்கள் என்று பொருள். இவர்களில் இனூயிட் (Inuit) எனப்படுவோர் வடக்கு அலாஸ்கா, வட கனடா, கிறீன்லாந்து வரை காணப்படுகின்றனர். யூப்பிக் (Yupic) எனப்படுவோர் மேற்கு அலாஸ்காவிலும் சைபீரியாவின் வடகிழக்கு முனையிலும் வாழ்கின்றனர். இவர்களை விட அலாஸ்காவின் அலூசியன் தீவுகளிலும், ரஷ்யாவின் கம்சாத்கா கிராயிலும் வாழும் உனாங்கா எனப்படும் அலூட் மக்கள் மூன்றாவது வகையான எஸ்கிமோக்கள்.எஸ்கிமோக்கள் குள்ளமாகவும், குட்டையான கால்களையும் உடையவர்கள். குளிர்காலத்தில் இவர்கள் இக்லூ என்றழைக்கப்படும் பனிக்கட்டிகளினால் ஆன வீடுகளில் வசிக்கின்றனர். கோடைகாலத்தில் மிருகங்களின் தோலால் ஆன கூடாரங்களில் வாழ்கின்றனர்.எஸ்கிமோ என்ற ஆங்கிலச்சொல் ஆர்க்டிக் பகுதிச் செவ்விந்தியர்களின் மொழியில் இருந்து வந்தது. இச்சொல்லுக்கு பச்சை இறைச்சியை தின்பவர்கள் என்பது பொருள்.எஸ்கிமோக்களிடம் ஒரு விசித்திர பழக்கம் இருந்து வருகிறது.அதிகப்படியாகக் குழந்தை பிறந்தால் அதை அவர்கள் கொன்று விடுவார்களாம். அதிலும் பெண் குழந்தை பிறந்தால் உடனடியாக கொலை தான். பிறந்த குழந்தையை பனிக்கட்டியில் வைத்து விடுவார்களாம். குழந்தை பனியில் விறைத்து இறந்து விடுமாம். அதிகப்படியான குழந்தைகளை தங்கள் கடவுள் விரும்புவதில்லை என்பது இதற்கு அவர்கள் சொல்லும் காரணம்.

ஆஸ்திரேலிய பழங்குடிகள்.

Picture

 ஆஸ்திரேலிய பழங்குடிகள்(Indigenous Australians) எனப்படுவோர் ஆஸ்திரேலியக் கண்டத்தின் பழங்குடி இனமக்களாவர். இவர்கள் ஆஸ்திரேலியாவிலும் அதனைச் சுற்றியுள்ள சிறு தீவுகளிலும் உள்ள பூர்வீகக் குடிகள், மற்றும் டொரெஸ் நீரிணைத் தீவுகளைச் சேர்ந்த டொரெஸ் நீரிணைத் தீவார் (Torres Strait Islanders) ஆகியோர் ஆவர்.
 ஆஸ்திரேலிய ஒரு சிறிய கண்டம் என்ற போதிலும் , இதுவரை மேற்கொண்ட ஆய்வுகள் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் லெக்முங்கோ (Laje Mungo) என்னுமிடத்தில் 40,000 ஆண்டுகளுக்கு முன் பழங்குடிகள் இருந்ததற்கான ஆதாரங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. கற்காலத்திற்கு முன்பிருந்து மனிதர்கள் குடியிருந்தாலும் அவர்கள் தென்கிழக்கு ஆசியத் தீவுகளிலிருந்து மிகப்பழங்காலத்தில் பிரிந்தவர்களாகத் நம்பப்படுகிறது. மரபணு, மொழி அடிப்படையில் இப்பழங்குடிகளின் உறவும் தொடர்பும் (பிற நாட்டினத்தவர்களுடன்) உறுதிப்படவில்லை. 1788 இல் முதன்முதலாக ஐரோப்பியர்கள் இங்கு குடியேறியபோது மூன்று இலட்சம் பழங்குடிகள் இக்கண்டத்தில் வசித்து வந்தனர். அப்போது 500 வகையான பழங்குடியினர் இக்கண்டத்தில் தங்கள் சொந்த மொழியுடன் வாழ்ந்து வந்தனர்.
திருடப்பட்ட தலைமுறைகள்(Stolen Generations) எனப்படுவது ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலியப் பழங்குடிகள் மற்றும் டொரெசு நீரிணை தீவினர்களின் குடும்பங்களில் இருந்து ஆஸ்திரேலிய அரசினாலும் திருச்சபை மடங்களினாலும் அப்போதைய அரசுகளின் இனங்களை ஒன்றிணையச் செய்யும் கொள்கைகளுக்கமைய கிட்டத்தட்ட 1869 முதல் (அதிகாரபூர்வமாக) 1969 வரையான காலப்பகுதிகளில் ஆயிரக்கணக்கில் கட்டாயமாகப் பிரிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்ட குழந்தைகளின் தலைமுறைகளை அடையாளமிட்டுக் கொடுக்கப்பட்ட பெயராகும். பெப்ரவரி 13, 2008இல் கெவின் ரட் தலைமையிலான ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் இந்நடவடிக்கையை ஒரு மனித உரிமை மீறல் என அறிவித்தது. கெவின் ரட் ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் சார்பாக அத்தலைமுறையினரிடம் பகிரங்க மன்னிப்புக் கோரினார். சுமார் 40 ஆயிரம் ஆண்டுகள் தொன்மை வரலாற்றைக் கொண்ட இந்தப் பழங்குடிகள் தமக்கென்று வாழ்வை நதிக்கரையோரங்களிலும், உணவுப் பயிர்களை அண்டிய பகுதிகளிலும் அமைத்துக் கொண்டனர். 1788இல் கொள்ளைக்கார, கொலையாளிக் கைதிகளாக ஆங்கிலேயர்கள் ஆஸ்திரேலியாவில் குடியேறி, இப்பழங்குடிகளைக் கட்டாயமாக துப்பாக்கி முனையில் அவர்களின் இருப்பிடங்களில் இருந்து அகற்றினார்கள். இந்நடவடிக்கையின்போது, ஆயிரக்கணக்கானவர்கள் வேட்டையாடப்பட்டனர்.1910 முதல் 1969 வரையில் கிட்டத்தட்ட 100,000 வரையிலான சிறுவர்கள் காவற்துறையினராலும், சமூக நலசேவையாளர்கள் என்று சொல்லப்படுபவர்களாலும் இனங்களை ஒன்றிணையச் செய்யும் கொள்கைகளுக்கமைய தம் குடும்பங்களில் இருந்து கட்டாயமாகப் பிரித்தெடுக்கப்பட்டனர். இச்சிறுவர்களில் பெரும்பான்மையோர் ஐந்து வயதுக்குக் கீழேயானவர்கள். இவ்வாறு தம் குடும்பங்களில் இருந்தும் நிரந்தரமாக, பலவந்தமாகப் பிரித்தெடுக்கப்பட சிறுவர்கள் கிறிஸ்தவ ஆலயங்களிலும், சமூக நல அமைப்பு என்று சொல்லப்படும் அமைப்புக்களிலும் அடைத்து வைக்கப்பட்டனர். சிலர் வெள்ளையின மக்களின் தத்தெடுப்புக்கு ஆளானார்கள். மனித உரிமைவாதிகள், மற்றும் பழங்குடிகளில் நன்கு படித்துத் தேறிய புலமையாளர்களின் தொடர்ந்த கண்டனக் குரல்களின் பலனாக, “வீட்டுக்குக் கொண்டு வாருங்கள்” (Bringing them Home) என்ற விசாரணை, “ஆஸ்திரேலிய மனித உரிமை மற்றும் சம உரிமை ஆணை”யின் தலைவர் சேர் ரொனால்ட் வில்சன், மற்றும் பழங்குடியினரின் பொதுநல உரிமை ஆணையாளர் மிக் டொட்சன் ஆகியோரின் மேற்பார்வையில் மே 11, 1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இவர்கள் தமது விசாரணைகளில் ஆஸ்திரேலியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் பயணம் செய்து மொத்தம் 535 பழங்குடியனரின் வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர். சுமார் 600ற்கும் மேற்பட்ட ஆவணங்களைத் தேடிக் கண்டுபிடித்தனர். இவ்விசாரணையின் அறிக்கை 700 பக்கங்களில் மே 26, 1997 இல் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த ஆவணத்தில் வழங்கப்பட்ட 54 பரிந்துரைகளில் முக்கிய மூன்று பரிந்துரைகளாவன: அவுஸ்திரேலிய பூர்வீகச் சமூகத்துக்கான வாழ்வைச் சீரமைக்கும் நிதிக்கொடுப்பனவு முறைமையை ஏற்படுத்தல். பலவந்தமான பிரித்தெடுப்புக்கு ஆளான தலைமுறைக்கு புனர்வாழ்வு அமைப்பை ஏற்படுத்தல். அவுஸ்திரேலிய தேசிய மற்றும் மாநிலப்பாராளுமன்றுகள் தமது முன்னோர்கள் சட்ட ரீதியாகவும், கட்டளைப் பிரகாரமும் செய்த இப்படியான வரலாற்றுத் தவறுகளை ஏற்று அதிகாரபூர்வமான மன்னிப்பைப் பகிர்தல். இந்த ஆவணம் வழங்கப்பட்ட காலத்தில் ஜோன் ஹவார்ட் தலைமையிலான பழமைவாத ஆஸ்திரேலிய லிபரல் கட்சி ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்தது. ஜோன் ஹவார்ட் இவ்வாறு பொது மன்னிப்புக் கேட்பதினால் இத்தலைமுறையினருக்கு பெரும் நட்டஈடு வழங்கப்பட வாய்ப்புண்டு என்ற காரணத்தினால் பொது மன்னிப்புக் கேட்க மறுத்து விட்டார். ஆனாலும் விக்டோரியா, நியூ சவுத் வேல்ஸ், தெற்கு ஆஸ்திரேலியா, வட மாநிலம் ஆகியவை அவற்றிற்குரிய மாநில நாடாளுமன்றங்களில் அதிகாரபூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டன. டிசம்பர் 11, 2007 இல் புதிதாக தெரிவு செய்யப்பட்ட கெவின் ரட் தலைமையிலான தொழிற் கட்சி அரசு திருடப்பட்ட தலைமுறையினரிடம் தமது முறையான மன்னிப்பைக் கோரும் என அறிவித்தது. மன்னிப்பு வாசகங்களில் இடம்பெறக்கூடிய செய்திகளை பழங்குடித் தலைவர்களிடம் கலந்தாலோசித்து முடிவெடுப்பதாக அறிவித்தது. எதிர்க்கட்சித் தலைவர்களும் இதற்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர்.இம்மன்னிப்பு வாசகங்களின் மூலம் நட்டஈடு வழங்கல் தவிர்க்கப்பட்டுள்ளது என கெவின் ரட் உறுதியளித்தார்.பெப்ரவரி 13, 2008 இல் பழங்குடியின மக்களுக்கு துன்பங்களையும் இழப்புகளையும் ஏற்படுத்தக்கூடியவாறு அமைந்துள்ள அரசின் கொள்கைகள் மற்றும் சட்டங்கள் என்பவற்றிற்காக அனைத்துப் பழங்குடியின மக்களிடமும் பிரதமர் கெவின் ரட் நாடாளுமன்றத்தில் மன்னிப்புக் கேட்டார்.
மாபோ எதிர் குயின்ஸ்லாந்து(Mabo v Queensland) என்பது ஆஸ்திரேலியாவில் உயர் நீதிமன்றத்தினால் 1992, ஜூன் 3 ஆம் நாள் தீர்ப்புக் கூறப்பட்ட புகழ் பெற்ற ஒரு வழக்காகும். இப்புகழ் பெற்ற தீர்ப்பை அடுத்து 1788 ஆம் ஆண்டு முதல் ஐரோப்பியக் குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து நடைமுறையில் இருந்து வந்த terra nullius (வெற்று நிலம் – எவருக்கும் சொந்தமில்லாத நிலம்) என்ற கொள்கை இல்லாமல் செய்யப்பட்டு, தலைமுறைகளாக நிலம் வைத்திருந்த (native title) ஆஸ்திரேலியப் பழங்குடியினருக்கு நில உரிமை வழங்கப்பட்டது. இவ்வழக்கு முதன் முதலில் டொரெஸ் நீரிணையின்மறி தீவுகளைச் சேர்ந்த மீரியாம் பழங்குடிகளான எடி மாபோ மற்றும் டேவிட் பாசி, ஜேம்ஸ் ரைஸ் ஆகியோர் 1982 ஆம் ஆண்டில் உயர் நீதிமன்றத்தில் குயின்ஸ்லாந்து மாநில அரசுக்கு எதிராக வழக்கைத் தாக்கல் செய்திருந்தனர்.
  ஈயோராஅல்லது லோரா அல்லது லியோரா என்பது ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களில் ஒரு குடியின் பெயர். தாங்கள் பழங்குடிகள் என்பதை அவர்கள் தங்கள் மொழியில் கூரி என்று அழைப்பர். இம்மக்கள் இன்று சிட்னி மாநகரில் தொன்றுதொட்டு வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இங்கிலாந்தில் இருந்து ஜனவரி 1788 இல் சுமார் 1300 குற்றவாளிகளும் அவர்களுடைய காப்பாளர்களும் கப்பலில் வந்து இறங்கிய பொழுது, இந்த ஈயோரா மக்களில் 1500 பேர் இருந்ததாகக் கருதப்படுகிறது. ஆனால் வந்திறங்கியோர்கள் கொண்டு வந்த வைசூரி அல்லது பெரியம்மை போன்ற நோயாலும், பிற காரணங்களினாலும், சுமார் 19ஆம் நூற்றாண்டுக்குள் இவ்வினம் முற்றிலுமாக அற்றுவிட்டதாகக் கருதப்படுகிறது. ஈயோரா இன மக்களின் மொழியில் இருந்து இன்று ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலும் வழங்கும் சொற்களில் சில: டிங்கோ நாய் (dingo), வூமெரா ஈட்டி (woomera), வாலபி (wallaby), வாம்பட்டு என்னும் பேரெலிவகை (wombat), வரட்டாச் செடி (waratah), பழுப்பு நிற மோபோக்கு ஆந்தை boobook (owl), கங்காருவிற்கும் வாலபியிற்கும் இடைப்பட்ட அளவுடைய வால்லரு என்னும் விலங்கு (wallaroo) ஆகியன.
                                பென்னெலாங்கு அவர்கள் பென்னெலாங்கு என்னும் பெயருடைய ஈயோரா இனத்தில் இருந்த ஒருவரர் ஆங்கிலேயர்களுக்கும் ஈயோரா இன மக்களுக்கும் இடையே தொடர்பாளராக இருந்துள்ளார். இவருடைய படம் இணைக்கப்பட்டுள்ளது. இவர் மே 24, 1793 இல் இங்கிலாந்து அரசர் 3ஆம் ஜோர்ஜை (King George III) சந்தித்து இருக்கிறார்.
மெரியாம் மக்கள்(Meriam people) எனப்படுவோர் ஆஸ்திரேலியாவின் வடமுனையில் அமைந்துள்ள டொரெஸ் நீரிணைத் தீவுகளின் கிழக்குத் தீவுகளில் ஒன்றான மெர் எனப்படும் மறி தீவில் வாழும் ஆஸ்திரேலியப் பழங்குடி மக்கள் ஆவர்.மெரியாம் மக்கள் 1992 ஆம் ஆண்டின் புகழ் பெற்ற மாபோ எதிர் குயின்ஸ்லாந்து வழக்கை அடுத்து பெரிதும் பேசப்பட்டனர். எடி மாபோ என்பவர் குயின்ஸ்லாந்து மாநில அரசுக்கு எதிராக இவ்வழக்கைத் தாக்கல் செய்து வெற்றி பெற்றார். இத்தீர்ப்பை அடுத்து ஆஸ்திரேலியப் பழங்குடிகளின் பாரம்பரிய நிலங்கள் அவர்களுக்கே உரியது என அங்கீகரிக்கப்பட்டது.மெரியாம் மக்கள் பொதுவாக தோட்டக் கலையையே தமது தொழிலாகக் கொண்டிருந்தாலும், அனைத்து மெரியாம் மக்களும் கடல் உரிமையைக் கொண்டிருக்கின்றனர். தீவுகளில் 60 கிமீகள் வடக்கேயும் மேற்கேயும் மீன்பிடித் தொழிலை தமது உரிமைகளாக வைத்திருக்கின்றனர்.
 டொரெசு நீரிணை தீவினர்(Torres Strait Islanders) என்பவர்கள் ஆசுதிரேலியாவின் குயின்சுலாந்து மாநிலத்தின் டொரெசு நீரிணைத் தீவுகளில் வாழும் பழங்குடி இனத்தவர்கள் ஆவர். இவர்கள் மரபியல் மற்றும் கலாச்சார ரீதியில் பப்புவா நியூ கினியின் மெலனீசியா மக்களுடன் தொடர்புடையவர்கள் ஆவர். இவ்வினத்தவர் ஆசுதிரேலியாவின் இனசுத்திகரிப்பு முறையினால் பாதிப்புக்குள்ளானவர்கள் ஆவர். இவ்வினத்தவரும் மற்றும் பல ஆசுதிரேலிய பழங்குடி மக்களும் திருடப்பட்ட தலைமுறைகள் என்று அழைக்கப்படுவர்.
துருகானினிஅல்லது ட்ரூகாணினி அல்லது துருகர்நானர் (Truganini அல்லது Trugernanner, 1812 – மே 8, 1876) என்பவர் தாஸ்மேனிய நாட்டின் தொன்மையான பழங்குடி இனத்தின் கடைசிப் பெண் ஆவார். திராவிட இனத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்ட இவரது இனம் கிபி 1800 வாக்கில் அந்நாட்டில் குடியேறத்தொடங்கிய ஆங்கிலேயர்களால் அழியத்தொடங்கியது. மிருகங்களை போல துப்பாக்கி முனையில் இவர்களை வேட்டையாடிய ஆங்கிலேயர்கள், அதற்கு ‘கறுப்பனை பிடித்தல்’ (Black Catching) என்றும் பெயர் வைத்தனர். இவ்வாறான கொடூரங்களால் சுமார் 5000 வரை இருந்த இவர்களது எண்ணிக்கை 1830 ஆம் ஆண்டு 75-ஆக குறைந்தது. இவர்களில் கடைசியாக மிஞ்சியது துருகானினி மட்டுமே. இவரும் 1876-ம் ஆண்டு சிறையிலேயே இறந்தார். இவரோடு தாஸ்மேனிய பழங்குடி இனம் முழுமையாக அழிந்தது.
தாஸ்மேனிய பழங்குடிகள் இந்திய-திராவிட இனத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலிய கண்டத்திலிருந்து இங்கு வந்து குடியேரியவர்கள். அதன் பிறகு சுமார் 10.000 ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலியா, தாஸ்மேனிய ஆகியவற்றை இணைத்த நிலமானது கடல் நீரில் மூழ்கிவிட்டது. இதன் பிறகு மற்ற உலகிலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட இவர்கள், நாகரீக வளர்ச்சி பெறாதவர்களாக வளர்ந்தனர். விவசாயம், ஆடு மாடு வளர்ப்பு, தற்க்காப்பு போன்ற எதையும் இவர்கள் அறிந்திருக்கவில்லை. இவர்களின் கடைசி பரம்பரையிலேயே துருகானினி வந்தார். இதன் பிறகு சுமார் 1800 வாக்கில் ஆங்கிலேயர்கள் தாஸ்மேனிய நாட்டில் வந்து குடியேறினார்கள். தாஸ்மேனியாவை ஒரு வெள்ளை மக்களின் தேசமாக மாற்ற எண்ணிய இவர்கள், அங்கு வாழ்ந்த பழங்குடி மக்களை கொல்லத்துவங்கினர். இதன் பிறகு கி.பி 1828-ம் ஆண்டு அங்கு ஆளுனராக நியமிக்கப்பட்ட ஜோர்ஜ் ஆர்தர் என்பவன்., பழங்குடி மக்களை கொல்வதை சட்டமாக்கினான். இதன் படி ஆண், பெண்களை கொல்பவர்களுக்கு 3 இங்கிலாந்து பவுண்டும், குழந்தைகளை அடிமைப்படுத்தி கொண்டு வருபவர்களுக்கு ஒரு இங்கிலாந்து பவுண்டும் ஊக்கத்தொகையாக கொடுக்கப்பட்டது. ‘கறுப்பனை பிடித்தல்’ (Black catching) என்ற இந்த சட்டத்திற்குப் பிறகு அநேகமாக அனைத்து வெள்ளையர்களும் கையில் துப்பாக்கியுடன் காட்டிற்குள் நுழைந்தனர். கண்ணில் பயத்துடன் குடும்பம் குடும்பமாக தப்பியோடிய பழங்குடிகளை, மிருகங்களைப் போல வேட்டையாடினர். எந்த விதமான தற்காப்பு கலைகளையும் அறிந்திராத இவர்கள், வெள்ளையர்களின் துப்பாக்கிக்கு மொத்த மொத்தமாக பலியாகினர். இதன் காரன்மாக 1800 வாக்கில் சுமார் 5000 வரை இருந்த இவர்களின் மக்கள் தொகை, முப்பதே ஆண்டுகளில் வெறும் 75-ஆக சுருங்கியது. அடிமையாக இருந்த குழந்தைகள் அனைவரும் இறந்துவிட்டனர். இதற்குள் எழுந்த உலக எதிர்ப்பின் காரணமாக எஞ்சிய 72 ஆண்களும் 3 பெண்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் துருகானினியும் ஒருவர். இவர்களும் சரியான முறையில் உணவும், தண்ணீரும் கொடுக்கப்படாமல் கொடுமைப்படுத்தப்பட்டனர். இதன் காரணமாக 1869-ல் துருகானினியுடன் சேர்த்து இரண்டு பெண்களும் ஒரு ஆணுமே மிஞ்சினர். இது வெளியுலகிற்குத் தெரிந்தவுடன் இங்கிலாந்து நாட்டில் இருந்து வந்த மருத்துவர்கள் இவர்களை பரிசோதனை என்ற பெயரில் கொடுமைப்படுத்தத் தொடங்கினர். மேலும் இதற்குள் இறந்த அந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணின் உடலையும் கூறுபோட்டனர். இதையெல்லாம் கண்ட துருகானினி தான் இறந்த பிறகு தனது உடலை இவ்வாறு கூறுபோட வேண்டாம் எனவும், தங்கள் வழக்கப்படி கடலில் புதைத்து விடும் படியும் கேட்டுக்கொண்டார். இதன் பிறகு 1876-ல் உடல் நலிந்த நிலையில் துருகானினி மரணமடைந்தார். துருகானினி இறந்தப்பின் அவரின் கோரிக்கையை நிராகரித்த வெள்ளையர் அரசாங்கம் அவரை காட்டின் ஒரு மூலையில் புதைத்தது. பின்பும் இவரின் எலும்புக்கூட்டை தோண்டியெடுத்த வெள்ளையர் அரசு, தாஸ்மேனிய தேசிய அருங்காட்சியகத்தில் ‘தாஸ்மேனிய கடைசி பழங்குடிப்பென்’ என்ற பெயரில் காட்சிக்காக வைத்தனர். இதை உலக மக்கள் எதிர்த்த நிலையில் துருகானினியின் எலும்புக்கூட்டை அருங்காட்சியகத்தின் மற்றொரு அறையில் வைத்துப் பூட்டினர்.

தாஸ்மேனிய பழங்குடிகள் இந்திய-திராவிட இனத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலிய கண்டத்திலிருந்து இங்கு வந்து குடியேரியவர்கள். அதன் பிறகு சுமார் 10.000 ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலியா, தாஸ்மேனிய ஆகியவற்றை இணைத்த நிலமானது கடல் நீரில் மூழ்கிவிட்டது. இதன் பிறகு மற்ற உலகிலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட இவர்கள், நாகரீக வளர்ச்சி பெறாதவர்களாக வளர்ந்தனர். விவசாயம், ஆடு மாடு வளர்ப்பு, தற்க்காப்பு போன்ற எதையும் இவர்கள் அறிந்திருக்கவில்லை. இவர்களின் கடைசி பரம்பரையிலேயே துருகானினி வந்தார். இதன் பிறகு சுமார் 1800 வாக்கில் ஆங்கிலேயர்கள் தாஸ்மேனிய நாட்டில் வந்து குடியேறினார்கள். தாஸ்மேனியாவை ஒரு வெள்ளை மக்களின் தேசமாக மாற்ற எண்ணிய இவர்கள், அங்கு வாழ்ந்த பழங்குடி மக்களை கொல்லத்துவங்கினர். இதன் பிறகு கி.பி 1828-ம் ஆண்டு அங்கு ஆளுனராக நியமிக்கப்பட்ட ஜோர்ஜ் ஆர்தர் என்பவன்., பழங்குடி மக்களை கொல்வதை சட்டமாக்கினான். இதன் படி ஆண், பெண்களை கொல்பவர்களுக்கு 3 இங்கிலாந்து பவுண்டும், குழந்தைகளை அடிமைப்படுத்தி கொண்டு வருபவர்களுக்கு ஒரு இங்கிலாந்து பவுண்டும் ஊக்கத்தொகையாக கொடுக்கப்பட்டது. ‘கறுப்பனை பிடித்தல்’ (Black catching) என்ற இந்த சட்டத்திற்குப் பிறகு அநேகமாக அனைத்து வெள்ளையர்களும் கையில் துப்பாக்கியுடன் காட்டிற்குள் நுழைந்தனர். கண்ணில் பயத்துடன் குடும்பம் குடும்பமாக தப்பியோடிய பழங்குடிகளை, மிருகங்களைப் போல வேட்டையாடினர். எந்த விதமான தற்காப்பு கலைகளையும் அறிந்திராத இவர்கள், வெள்ளையர்களின் துப்பாக்கிக்கு மொத்த மொத்தமாக பலியாகினர். இதன் காரன்மாக 1800 வாக்கில் சுமார் 5000 வரை இருந்த இவர்களின் மக்கள் தொகை, முப்பதே ஆண்டுகளில் வெறும் 75-ஆக சுருங்கியது. அடிமையாக இருந்த குழந்தைகள் அனைவரும் இறந்துவிட்டனர். இதற்குள் எழுந்த உலக எதிர்ப்பின் காரணமாக எஞ்சிய 72 ஆண்களும் 3 பெண்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் துருகானினியும் ஒருவர். இவர்களும் சரியான முறையில் உணவும், தண்ணீரும் கொடுக்கப்படாமல் கொடுமைப்படுத்தப்பட்டனர். இதன் காரணமாக 1869-ல் துருகானினியுடன் சேர்த்து இரண்டு பெண்களும் ஒரு ஆணுமே மிஞ்சினர். இது வெளியுலகிற்குத் தெரிந்தவுடன் இங்கிலாந்து நாட்டில் இருந்து வந்த மருத்துவர்கள் இவர்களை பரிசோதனை என்ற பெயரில் கொடுமைப்படுத்தத் தொடங்கினர். மேலும் இதற்குள் இறந்த அந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணின் உடலையும் கூறுபோட்டனர். இதையெல்லாம் கண்ட துருகானினி தான் இறந்த பிறகு தனது உடலை இவ்வாறு கூறுபோட வேண்டாம் எனவும், தங்கள் வழக்கப்படி கடலில் புதைத்து விடும் படியும் கேட்டுக்கொண்டார். இதன் பிறகு 1876-ல் உடல் நலிந்த நிலையில் துருகானினி மரணமடைந்தார். துருகானினி இறந்தப்பின் அவரின் கோரிக்கையை நிராகரித்த வெள்ளையர் அரசாங்கம் அவரை காட்டின் ஒரு மூலையில் புதைத்தது. பின்பும் இவரின் எலும்புக்கூட்டை தோண்டியெடுத்த வெள்ளையர் அரசு, தாஸ்மேனிய தேசிய அருங்காட்சியகத்தில் ‘தாஸ்மேனிய கடைசி பழங்குடிப்பென்’ என்ற பெயரில் காட்சிக்காக வைத்தனர். இதை உலக மக்கள் எதிர்த்த நிலையில் துருகானினியின் எலும்புக்கூட்டை அருங்காட்சியகத்தின் மற்றொரு அறையில் வைத்துப் பூட்டினர். இதன் பிறகு துருகானினி இறந்து சரியாக ஒரு நூற்றாண்டு ஆகிய பின்னர் 1976-ம் ஆண்டு தாஸ்மேனியாவில் திரண்ட துருகானினியின் ஆதரவாளர்கள், அருங்காட்சியகத்தின் காவலை மீறி உள்ளே நுழைந்து துருகானினியின் எலும்புக்கூட்டை மீட்டனர். பின் இதனை சகல மரியாதைகளுடன் தகனம் செய்த இவர்கள், சாம்பலை அவரின் ஆசைப்படியே கடலில் கரைத்தனர்.

இதன் பிறகு துருகானினி இறந்து சரியாக ஒரு நூற்றாண்டு ஆகிய பின்னர் 1976-ம் ஆண்டு தாஸ்மேனியாவில் திரண்ட துருகானினியின் ஆதரவாளர்கள், அருங்காட்சியகத்தின் காவலை மீறி உள்ளே நுழைந்து துருகானினியின் எலும்புக்கூட்டை மீட்டனர். பின் இதனை சகல மரியாதைகளுடன் தகனம் செய்த இவர்கள், சாம்பலை அவரின் ஆசைப்படியே கடலில் கரைத்தனர்.

SHARE