ஐபிஎல் கிரிக்கெட்: பிளே ஆஃப் யுத்தம்

159

புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த மும்பை மற்றும் புனே அணிகள் முதல் தகுதிச் சுற்றுப் போட்டியில் விளையாடுகின்றன. இந்தப் போட்டி மும்பையில் செவ்வாய் இரவு இந்திய நேரப்படி 8 மணிக்கு தொடங்குகிறது.

முதல் தகுதிச் சுற்றில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிடும். தோல்வி அடையும் அணி, இறுதி ஆட்டத்திற்கு முன்னேற மற்றொரு வாய்ப்பு வழங்கப்படுகிறது.

புள்ளிகள் பட்டியலில் 3ஆவது மற்றும் 4ஆவது இடங்களைப் பிடித்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள், எலிமினேட்டர் எனப்படும் வெளியேற்றுதல் சுற்றில் விளையாடுகின்றன.

பெங்களூருவில் வரும் 17ஆம் திகதி நடைபெறும் இந்தப் போட்டியில் தோல்வி அடையும் அணி, தொடரில் இருந்து வெளியேற நேரிடும்.

எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் அணி, மும்பை மற்றும் புனே அணிகள் இடையே நடந்த முதல் தகுதிச் சுற்றுப் போட்டியில் தோல்வியைத் தழுவிய அணியுடன், இரண்டாவது தகுதிச் சுற்றில் விளையாடும். இதில் வெற்றி பெறும் அணி, இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

முதல் தகுதிச் சுற்றுப் போட்டியில் வெற்றி பெறும் அணியும், இரண்டாவது தகுதிச் சுற்றில் வெற்றி பெறும் அணியும் சாம்பியன் பட்டத்திற்கான இறுதி ஆட்டத்தில் வரும் 21ஆம் திகதி ஹைதராபாத்தில் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

SHARE