ஐயோ இந்த மாணவியின் நிலை

170

சென்னை, கோவை, மதுரை சேலம், திருச்சி போன்ற நகரங்களில் ஜல்லிக்கட்டு போராட்டம் மாணவர்கள் எழுச்சியால் பெரும் வெற்றி பெற்றது.

இதில் உலகமே வியந்த விஷயம் என்னவென்றால் நான்கு நாட்கள் போராட்டத்தில் காவல் துறை கொடுத்த அபார ஒத்துழைப்பு.

காவலர்கள் மாணவர்களுக்கு செய்த உதவிகள் என மிரண்டது உலகம். அதன் பின் ஐந்தாம் நாள் அதே போலீஸ் தனது கோர முகத்தைக் காட்டியது.

மாணவர்களை வெறியோடு தாக்கியது. தீவைத்தது. தேடிப் போய் வீடு புகுந்து அடித்து நொறுக்கியது போலீஸ்.

காரணங்கள் பல சொல்லப்பட்டாலும் உண்மை காரணம் பன்னீருக்கு மக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் அவப்பெயர் உண்டாக்க நடந்த உட்கட்சி சதி என்றார்கள்.

ஒரு அரசியல் வார இதழ் ஒரு உண்மையைச் சொல்கிறது. சசிகலாவை போராட்டத்தில் கடுமையாக திட்டியும், கேலி பண்ணி கோஷம் போட்டவர்களையும் போலீஸ் படம் எடுத்து சேமித்துக் கொண்டே இருந்தார்கள் சில கருப்பு போலீஸ்.

அவர்கள் மூலம் தேடுதல் வேட்டை ஆரம்பம் என்கிறது அந்த வார இதழ். மாணவர்கள் முற்றிலும் நிலை குலைந்து போக வேண்டும் என்பதே நோக்கம்.

இனி எந்தக் காலத்திலும் மாணவர்கள் போராட்டம் என்று இறங்கவே கூடாது என்பதும் கூடுதல் நோக்கம். அப்போ அந்த அழகான புரட்சிப் பெண் கதி ? அடிக்க அடிக்கத்தான் பந்து உயர எழும்.

SHARE