ஐ.எஸ் தலைவரை கொல்ல சதி? விஷம் கலந்த உணவால் பரபரப்பு!

148

625-500-560-350-160-300-053-800-748-160-70-2

ஐ.எஸ் தலைவர் அபுபக்கர் பாக்தாதி மற்றும் அவரது நெருங்கிய நண்பர்கள் 3 பேருக்கு உணவில் விஷம் கலந்து கொல்ல நடந்த சதி அம்பலமாகியுள்ளது.

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் பாக்தாதி மற்றும் அவரது நெருங்கிய நண்பர்கள் 3 பேருக்கு உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் வேறு முமாமிற்கு மாற்றப்பட்டுள்ளத்காக தெரிய வந்துள்ளது.

ஈராக்கின் நினெவே பகுதியில் உள்ள ஒரு மறைவிடத்தில் தகங்கியிருந்த பாக்தாதி மற்றும் சில தலைவர்களுக்கு சம்பவத்தன்று மதியம் உணவு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

உணவருந்திய 4 பேரும் ரத்த வாந்தி எடுத்ததாகவும், உடனடியாக அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு வேறு முகாமிற்கு மாற்றியதாகவும் தெரிய வந்துள்ளது.

தற்போது குறிப்பிட்ட தலைவர்கள் நான்கு பேரும் எந்த முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்த தகவல்களை மிக ரகசியமாக வைத்துள்ளனர்.

பரபரப்பான இச்சம்பவத்தை அடுத்து பல்வேறு நபர்களை அந்த அமைப்பினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். பாக்தாதியின் உணவில் விஷம் கலந்து வழங்கும் மட்டும் பாதுகாப்பு குறைப்பாடு ஏற்பட்டதன் காரணம் குறித்து அந்த அமைப்பின் முக்கிய தலைவர்கள் விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே ஐ.எஸ் பயங்கரவாதி ஒருவர் அணிந்திருந்த வெடிபொருள் பெல்ட் ஒன்று வெடித்துச் சிதறியதில் 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அவசர ஆலோசனை கூட்டத்தின்போது இந்த விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

SHARE