ஐ.நா செயலாருக்கு கைலாகு மட்டும் கொடுத்து வழியனுப்புங்கள் என முன்னதாக கோரியவர்கள் பின்னர் எங்கள் மனவருத்தத்தை புரிந்து கொண்டு ஆறு நிமிடங்கள் மாத்திரம் ஒதுக்கி தந்தார்கள்.

237

 

ஐ.நா செயலாருக்கு கைலாகு மட்டும் கொடுத்து வழியனுப்புங்கள் என முன்னதாக கோரியவர்கள் பின்னர் எங்கள் மனவருத்தத்தை புரிந்து கொண்டு ஆறு நிமிடங்கள் மாத்திரம் ஒதுக்கி தந்தார்கள். என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
1472826095_a1 1472826113_a2 cv-moon
யாழ்ப்பணத்திற்கு வெள்ளிக்கிழமை காலை விஜயம் மேற்கொண்ட ஐ.நா செயலாளர் யாழ்.பொது நூலகத்தில் வடமாகாண முதலமைச்சர் , மற்றும் மாகாண அமைச்சர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
குறித்த கலந்துரையாடல் தொடர்பில் வடமாகாண முதலமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் வினாவிய போதே அவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,

ஐநா செயலாளர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தர தாமதமானதால் எல்லா  நிகழ்வுகளும் தாமதாகி விட்டது. ஒரு மணித்தியாலம் காத்திருந்தோம். அதன் பின்னர் அவரது அலுவலகர் வந்து நீங்கள் வெறுமையே கைலாகு  கொடுத்துவிட்டு அவரை வழியனுப்பி விடுங்கள் என கேட்டார். அதற்கு நாம் மனவருத்தத்தை தெரிவித்தோம். பின்னர் சரி  ஆறு நிமிடங்கள் ஒதுக்கி தரலாம் என ஆறு நிமிடங்கள் மாத்திரமே ஒதுக்கி தரப்பட்டது.

ஆவணங்களை கையளித்து விட்டேன். 
ஆறுநிமிட பேச்சு தான் எமக்கு இடையில் நடைபெற்றது.  இது  இப்படி  தான்  நடக்கும் என  முன்னரே  நான்  ஊகித்துக் கொண்டதால் எங்கள் பிரச்சனைகள் தொடர்பில் உரிய ஆவணங்களை தயாரித்து அவற்றை  எல்லாம் அவரிடம் கையளித்து உள்ளேன்.
காணாமல் போனவர்கள் சுமார் 4 ஆயிரம் பேர் தொடர்பிலான விபரங்களை ஒரு புத்தக வடிவில் கையளித்து உள்ளேன். விடுவிக்க படவேண்டிய காணிகள் தொடர்பிலான அறிக்கைகளும் கையளித்து உள்ளேன்.
இவ்வாறு ஒவ்வொரு விடயம் தொடர்பிலான பல்வேறு தகவல்களை கொடுத்து இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவை ஐக்கிய நாடுகளுக்கு இருக்கின்றது. என குறிப்பிட்டு உள்ளேன்.
அத்துடன் 2009ம் ஆண்டு இங்கு வந்திருந்த போது மனித உரிமை சம்பந்தமாக சகல நடவடிக்கைகளையும் எடுப்பதாக அரசாங்கம் குறிப்பிட்டது. ஆனால் பயங்கரவாத தடை சட்டம் இதுவரை நீக்க படவில்லை.  அடுத்து போர் குற்றம் தொடர்பிலான பொறிமுறை தொடர்பில் இன்னமும் எந்த முன்னேற்றமும் இல்லை என குறிப்பிட்டுக் காட்டினேன். அடுத்து நல்லிணக்கத்திற்காக பாரிய பணம் செலவிட போவதாகவும் , அதற்காக உலக நாடுகள் பணத்தை வாரி வாரி அளிகவுள்ளதாகவும் , குறிப்பிடப்பட்டு உள்ளது
அவ்வாறு இருக்க பணத்தை நல்லிணக்கத்திற்கு பயன்படுத்துகிறோம் என கூறிக்கொண்டு போர் குற்றம் தொடர்பில் சரியான பொறிமுறையை உருவாக்காமல் எப்படி நாங்கள் நல்லிணக்கத்தை ஏற்படுத்த போகின்றோம்.
வடமாகாணத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான இராணுவத்தினர் இருக்கின்றார்கள். போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை எந்த நன்மைகளும் செய்யவில்லை , காணாமல் போனோர் தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்க வில்லை. சிறையில் எத்தனையோ அரசியல் கைதிகள் வாடிக்கொண்டு இருக்கின்றார்கள். இவ்வாறன சூழ்நிலையில் எவ்வாறு நல்லிணக்கத்தை உருவாக்க போகின்றீர்கள். ?
முதலில் போர் குற்ற விசாரனைககளை உரிய முறையில் நடாத்தினால் , மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை ஏற்படும் என குறிப்பிட்டேன்.
அத்துடன் , மிதிவெடி அகற்றல் போன்ற சில தேவையான விடயங்கள் தொடர்பிலும் எடுத்துக் கூறினேன்.
பாதிக்கப்பட்ட மக்கள் ஏற்றுக் கொள்ளும் பொறிமுறை ஊடாகவே போர்குற்ற விசாரணை முன்னெடுக்க படும். 
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு சென்ற முறை வந்த போதும் அரசாங்கத்திடம் கோரி இருந்தேன். இதுவரை காலமும் அதனை நீக்காது வைத்து இருப்பது அரசாங்கத்தின் பிழை எனவும் ,
அதனை நீக்கும் போது குறித்த சட்டத்தின் கீழ் யார் யார் கைது செய்யப்பட்டார்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள் அவர்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என அரசாங்கத்திடம் கோரி இருந்ததாகவும் கூறினார்.
போர் குற்ற விசாரணை மக்களால் ஏற்றுக் கொள்ள பட கூடியவாறு இருக்க வேண்டும். முக்கியமாக பாதிக்கப்பட்ட மக்கள் அதனை ஏற்றுகொள்ள கூடிய பொறிமுறையாக இருந்தால்  தான்  அந்த பொறிமுறை மூலம் விசாரணை செய்யப்படும். அதற்கே ஐக்கிய நாடுகள் சபை உதவிகளை வழங்கும் எனவும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர்  குறிப்பிட்டார். என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரவித்தார்.
SHARE