ஒலிம்பிக்கில் அம்பலமான கொள்ளை நாடகம். அமெரிக்க வீரர்களுக்கு தக்க தண்டனை!

185

625-500-560-350-160-300-053-800-748-160-70

ரியோ ஒலிம்பிக் போட்டிகளின் போது தங்களை துப்பாக்கி முனையில் மிரட்டி வழிப்பறி செய்ததாக நாடகமாடிய அமெரிக்க நீச்சல் வீரர் ரயான் லோக்ட் விளையாட 10 மாதகாலம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடந்த ரியோ ஒலிம்பிக்கின் போது அமெரிக்க நீச்சல் வீரர் உட்பட நான்கு பேர் தங்களை துப்பாக்கி முனையில் வழிப்பறி கொள்ளை செய்ததாக அபாண்டமாக குற்றம்சாட்டினர்.

சம்பவம் குறித்து பொலிசார் நடத்திய விசாரணையில் அவர்களின் நாடகம் அம்பலமானது. தனது இந்த நடத்தைக்கு மன்னிப்பு கேட்ட லோக்ட், “இதற்கான முழு பொறுப்பையும் ஏற்றுக் கொள்கிறேன் என கூறினார்.

இந்நிலையில், இவருடன் நாடகம் அரங்கேற்றிய மற்ற 3 வீரர்களுக்கும் 4 மாதங்கள் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதோடு மட்டுமல்லாமல் அடுத்த ஆண்டு புடாபெஸ்டில் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் லோக்ட் பங்கேற்க முடியாது என செய்தி வெளியாகியுள்ளது.

இந்தத் தடை பற்றி அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை என்றாலும் விரைவில் தடையை உறுதி செய்யும் அறிக்கையை அமெரிக்க ஒலிம்பிக் கமிட்டி வெளியிடும் என்று தெரிகிறது.

12 முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற ரயான் லோக்ட் இந்தச் செயல் காரணமாக பல ஸ்பான்சர்களை இழந்துள்ளார்.

SHARE